அடுத்த படத்திற்கு தயாராகும் கிருத்திகா உதயநிதி : ஹீரோ யார் தெரியுமா?

kruthiga udhayanidhi next movie
இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை  வெளியிட்டிருக்கிறார்.
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ. இவரது மனைவி கிருத்திகா உதயநிதி.

பன்முகத் திறமை கொண்ட இவர், ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 
அதன் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக வெற்றிப் பெறவில்லை.
கடந்த 3 வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
கிருத்திகாவின் மூன்றாவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.
காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை சீஃயீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழு வெளியிட்டுள்ளது. அதோடு இந்த படத்தில் நடிக்க உள்ளவர்கள் பற்றிய விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கப்பட  உள்ளது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top