கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை படு ஜோரு!

Koyambedu_Market

கொரோனா காரணமாக பலமாதங்களாக “கோயம்பேடு மார்க்கெட்” மூடி இருந்தது.இந்நிலையில்,ஒரு மாதத்திற்கு மும்பு “கோயம்பேடு மார்க்கெட்” திறக்கப்பட்டது.கார்த்திகை மாதத்தையோட்டி காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால்,கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால்,தீபாவளி பண்டிகைக்கு பின்,விலையும் சரிந்துள்ளது.பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடிற்கு காய்கறிகள் வரத்து உள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வெங்காயம் வருகிறது.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்,தற்போது மார்க்கெட்டில்,மொத்த வியாபாரம் மட்டுமின்றி சிறு,மொத்த வியாபாரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தினமும்,300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி வரத்து உள்ளது.தீபாவளி பண்டிகையுடன் அமாவாசையும் சேர்ந்து வந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்தது.பண்டிகை முடிந்த நிலையில் காய்கறிகளின் விலை சரிந்து வருகிறது.

நேற்று மொத்த விற்பனையில்1கிலோ பெரிய வெங்காயம்,40-55 ரூபாய்க்கும்,சாம்பார் வெங்காயம்,90-110;தக்காளி,15-20; கேரட்,55-60;உருளைக்கிழங்கு,35-40;பீன்ஸ்,10-15;பீட்ரூட்,35;சவ்சவ்-10;முள்ளங்கி-10;கோஸ்-12 ரூபாய்க்கும் விற்பனையாயின.மேலும்,வெண்டைக்காய்-10,கத்தரிக்காய்-15,காராமணி-20,புடலங்காய்-10,பாகற்காய்-15,கோவக்காய்-15 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.அதே போல்,சுரைக்காய்-12,முருங்கைக்காய்-60,காலிபிளவர்-20,சேனைக்கிழங்கு-15,சேப்பங்கிழங்கு-30,இஞ்சி-50,அவரைக்காய்-25,பச்சைமிளகாய்-20,பீர்க்கங்காய்-25,எலுமிச்சை-25,தேங்காய்-40,நூக்கல்-20,கொத்தவரை-20,குடைமிளகாய்-30 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.கார்த்திகை மாதத்தில்,சபரிமலை செல்வதற்கு மாலை அணி ந்துள்ளவர்கள் பலரும்,அசைவ உணவுகளை தவிர்த்துள்ளனர்.இதனால்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில்,காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெளி மார்க்கெட் வியாபாரிகள்,காய்கறிகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.விற்பனை சூடுபிடித்துள்ளதால்,கோயம்பேடு மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top