மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்? : தளபதி 66

keerthy suresh in thalapathy66
தளபதி விஜய் தற்போது விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதன்பிறகு, அடுத்தகட்ட படபிடிப்பு சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னையில், பிரத்யேகமாக மால் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தளபதி 66 படத்தின் அப்டேட்களும் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்?  : தளபதி 66

பிரபல இயக்குனர் வம்சி பைடி பல்லி இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர், தேசிய விருது பெற்ற மகரிஷி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபாஸ் நடித்த “முன்னா”, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த “பிருந்தாவனம்” படங்களை இயக்கியவர். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட “தோழா” (தெலுங்கில் ஊப்பிரி) படத்தின் இயக்குனர் இவர்தான். இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. வம்சி பைடி பல்லி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் விஜய்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. விஜயின் பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். கேரளாவில் தமிழிலேயே வெளியிடப்படும். இவ்வாறாக, தளபதி விஜய் தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். அதில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்ற தகவல் உலாவி வருகிறது. விஜய் 66 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இவர் முன்னதாக, பைரவா, சர்கார் படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top