மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி : “சர்தார்” படத்தில் வித்தியாசமான தோற்றம்.

karthi in sardhar first look
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படம் “சர்தார்”. முன்னதாக கார்த்தி சிறுத்தை படத்தில் இரட்டைவேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தவகையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்தில் சர்தார் படத்தில் நடிக்கிறார்.
karthi in Kaithi
பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் விஷால் நடித்த இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கார்த்தி தற்போது, மணிரத்னம் இயக்கம் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்து வருகிறார். அதன் 70 சதவீத படப்பிடிப்பு  முடிவடைந்துள்ள நிலையில் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது.
மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி : "சர்தார்" படத்தில் வித்தியாசமான தோற்றம்.
மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி : “சர்தார்” படத்தில் வித்தியாசமான தோற்றம்.
சமீபத்தில், வெளியான “சுல்தான்” படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலையும் பெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்தியின் தேவ், கைதி, தம்பி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அதில், கைதி திரைப்படம் மட்டுமே வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், சர்தார் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் “சர்தார்”.  அதன் FIRST LOOK போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கார்த்தி வயதான தோற்றத்தில் இருக்கிறார்.  இது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
karthi in sardhar first look
 காஷ்மோரா படத்தில் மொட்டை தலையுடன் கார்த்தி நடித்த கதாப்பாத்திரம் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இந்த கதாபாத்திரம் அதைபோல் ரசிக்கும்படியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இரட்டை வேடத்தில் ஒரு வேடம் வெளியாகி இருக்கிறது. இன்னொரு கதாப்பாத்திரம்  என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தூண்டியுள்ளது. கார்த்தியின், மாறுபட்ட நடிப்பாலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படம் முற்றிலும் அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகிறது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top