Main Menu

What’s New?

Connect With Us

கமலின் “விருமாண்டி” 17 ஆண்டுகள் நிறைவு : பொங்கல் அன்று OTT ரிலீஸ்.

virumandi in amazon prime
Read Carefully

SHARES

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விருமாண்டி. 2004  ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பெயர் சர்ச்சை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கமலுடன், அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். 
virumandi in amazon
 
2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இந்தாண்டுடன் 17 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதற்காக, ட்ரைலர் ஒன்றையும் கட் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் பொங்கல் தினத்தன்று OTT -ல் வெளியாகவுள்ளது.   
கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இப்படத்தை பற்றி சில நிமிடங்கள் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், பயன்படுத்தியிருக்கும் தொழிநுட்பம், கதைக்களம் போன்றவை கமலின் தனிப்பட்ட திறமையாகும். 
virumandi
 
விருமாண்டி படத்திற்கு முதலில் “சண்டியர்” என தலைப்பு வைத்தனர். பின்பு அதற்கு எதிர்ப்புகள் எழுந்ததால் பெயரை “விருமாண்டி” என மாற்றினர். கமல் ஹாசனின் திரைப்பயணத்தில் தான் இயக்கி, நடித்த படத்தில் மூன்றாவது படமாகும். இந்த படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 
தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரீ- ரிலீஸ் ஆவது ரசிகர்களை மகிழ்ச்சையளிக்கக்கூடியதாக உள்ளது.   

 

Virumaandi Trailer:  
Top