நடிப்புக்கு முழுக்குப்போடும் கமல்ஹாசன்  : வெளியான பகீர் தகவல்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இருந்து விலக இருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் திரும்பவும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது அரசியல் வாழ்க்கையில் மட்டுமே ஈடுபடுவாரா என்று அவரது ரசிகர்கள் கவலையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எரிகிற எண்ணையில் மேலும் தீயை ஊற்றுவதுபோல கமல்ஹாசனே நடிப்பில் இருந்து விலகும் முடிவில்தான் இருப்பதாக செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது. பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாய் பல ஹிந்தி படங்களில் நடித்தவர். நடித்துக் கொண்டிருப்பவர். ஹிந்தியில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கும் இவரது நடிப்பு ஸ்டைல் நம்மூர் ரகுவரனைப் போல வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் சர்ச்சையாகியிருக்கும் தி பேமிலி மேன்-2 வெப் சீரிஸீல் இவர்தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரீஸுக்காக சமீபத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பேட்டியளித்திருந்தார் மனோஜ் பாஜ்பாய். அப்படியொரு பேட்டியில்தான் மனோஜ் பாஜ்பாய் வெளியிட்டுள்ள ஒரு தகவல்தான் கமல்ஹாசனின் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அந்தப் பேட்டியில் “இப்போது யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்..?” என்று செய்தியாளர் மனோஜ் பாஜ்பாயிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு மனோஜ் பாஜ்பாய், “நான் அனைத்து பாலிவுட் நடிகர்களுடனும் நடித்துவிட்டேன். கமல்ஜியுடன் மட்டும் நடிக்கவில்லை. சமீபத்தில் அவரைச் சந்தித்தபோது அவரிடத்தில் இது பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர், “மனோஜ்… நான் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிட்டேன். இனிமேல் நான் புதுப் படங்களில் நடிப்பேனான்னு எனக்கே தெரியாதுன்னார்..” அவர் இப்படி சொன்னதும் அந்த நாள் முழுக்க சோகமாகவே இருந்தேன்…” என்று சொல்லியிருக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.
இப்போது கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்திருக்கிறார். இன்னமும் 40 சதவிகிதம் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.
அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கடுத்து ‘திரிஷ்யம்-2’ படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

முழுமையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் மாறினால் ‘திரிஷ்யம்-2’ படம்தான் அவருடைய கடைசி படமாக இருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் படவுலகத்தினர்.
ஏனெனில் ‘திரிஷ்யம்-2’ படத்தை நடிகை ஸ்ரீப்ரியாதான் தயாரிக்கவிருக்கிறார். எனவே கமல்ஹாசன் ஸ்ரீப்ரியாவுக்காக அந்தப் படத்தில் நிச்சயமாக நடித்துக் கொடுப்பார் என்றே தெரிகிறது.அதன் பின்பு கமல்ஹாசன் நடிப்பில் இருந்து விலகினால் நிச்சயமாக அது இந்தியத் திரையுலகத்துக்கே மிகப் பெரிய இழப்புதான்..!

மேலும் படிக்க:

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top