தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.கொரோனா காரணமாக தேர்தல் பேச்சுக்கள் சற்று மந்தமாகவே இருந்தாலும்,அதனை பரபரப்பாக்க கமல் முதல் ஆளாக களத்தில் குதித்துள்ளார்.
“மக்கள் நீதி மய்யம்”,கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.இதற்கு காரணம்,”மக்கள் நீதி மய்யம்” சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் அனைவருமே ஐ.ஏ.எஸ்;ஐ.பி.எஸ்;மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள் என படித்தவர்கள்.
இந்த வெற்றியை அடுத்து “மக்கள் நீதி மய்யம்” கட்சி தமிழகத்தில் தவிர்க முடியாத கட்சியாக மாறிவிட்டது.
அதன் பிறகு,”இந்தியன்-2″,”தலைவன் இருக்கின்றான்”,மற்றும் “பிக்பாஸ்-4” என கமல் பிஸியானார்.இருந்தாலும் அவ்வப்போது தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ட்விட்டர் மூலமாகவும்,சில சமயங்களில் பேட்டி மூலமாகவும் பேசி வந்தார்.
இந்தியன்-2,தலைவன் இருக்கின்றான் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிப்போன காரணத்தாலும்,சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தாலும்,தனது “மக்கள் நீதி மய்யம்” நிர்வாகிகலோடு கட்சி பணிகள் குறித்து,சமீபத்தில் ஆலோசனைகளை நடத்தினார் கமல்.
இதன் தொடர்ச்சியாக,மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார்.மதுரையில் புரட்சி நடப்பது புதிதல்ல.எனவேதான் இங்கிருந்து புரட்சியைத் தொடங்கி உள்ளோம்,என கமல் பேட்டியளித்தார்.
தற்போது,இளைஞர்ககளை அரசியல் மிகவும் பாதித்துள்ளது.எனவே,இளைஞர்களை அரசியலை கையில் எடுத்து,புதிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அடுத்த வேளை உணவுக்கு ஏங்கும் ஏழை எளிய மக்களிடம் வாக்குக்கு ரூ.5000 கொடுத்தால் என்ன செய்வார்கள்? பணம் வாங்கதான் வாங்குவார்கள்!இங்குள்ள அரசியல்வாதிகளால்,மக்களுக்கு ரூ.5 லட்சம் கூட கொடுக்க முடியும்.மதுவை தனியார் விற்க அனுமதிப்போம்.ஏனென்றால்,கள்ளச்சாராயத்துக்கு வழிவிட்டுவிடக் கூடாது.
உணவு,குடிநீர்,வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளை அரசுதான் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.மக்களின் குறைகளை அரசு தேடிச்சென்று தீர்க்க வேண்டும்.அதை “மக்கள் நீதி மய்யம்” செய்யும்.”மக்கள் நீதி மய்யம்” ஆட்சியில்,விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவார்கள்.குறிப்பாக,பெண் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.அனைத்து மக்களுக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும்.கல்வியை எளிமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.நீட் தேர்வு விவகாரத்தில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.என்று மதுரை தனியார் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கமல் அதிரடியாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,கமலை வரவேற்கவும்,ஆதரவு தரவும் ஏராளமான மக்கள் வழி நடுக்க இருபுறமும் இருந்து வரவேற்றார்கள்.
அதே போல் நேற்று தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர்,கோவில்பட்டியில் தொழில்முனைவோர்,கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.எனது நண்பர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார்.அவரது கொள்கை குறித்து இனிதான் பார்க்க வேண்டும்.மக்கள் பிரச்சனைக்காக,மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.என்று நிருபர்களுக்கு கமல் பேட்டியளித்தார்.
ரஜினி-கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்றனர்.பின்னர் தனி தனியாக படங்களில் நடித்து,போட்டியாளர்களாக இருவரும் வளர்ந்தனர்.அது போலவே கட்சியிலும் இருவரும் இணைந்து வெற்றி பெற்று.பின்னர் தனி தனியாக இருவரும் வளம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.சுருக்கமாக சொன்னால் கருணாநிதியும்,எம்.ஜி.ஆர் போல,தொடக்கத்தில் இணைந்தும் பின்னர் தனித்தனியாக அரசியலிலும் வளர்ந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகை மீறி கமல் தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகிறார்,என்று ஆளுங்கட்சியினர் குற்றஞ்சாட்ட,ஆளுங்கட்சியினருக்கு வைத்தெறிச்சல் என கமல் காட்டம் காட்டினார்.அதே போல்,கமலின் சின்னமான “பேட்டரி டார்ச் லைட்” சின்னத்தை தேர்தல் ஆணையம் இழுப்புரி செய்வதால்,எனது விஸ்வரூபத்தை பார்க்க நேரிடும் என கமல் கோபம் கொண்டார்.
எது எப்படியோ…..கமல் அரசியல் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார்……ரஜினி…….? என்ற கேள்வியும்,ரஜினி-கமல் கூட்டணி சாத்தியமா? என்கின்ற கேள்வியையும் முன் வைக்கிறது சென்னையில்.காம்.அது போல மாற்று அரசியலை முன்னெடுத்து சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வரும் கமலுக்கு பாராட்டுக்கள்!