ஜெட் வேகத்தில் கமல்|பிரச்சார வாகனம் ரெடி!

ஜெட் வேகத்தில் கமலஹாசன் தனது “மக்கள் நீதி மய்யத்தை” செயல்பட தொடங்கிவிட்டார்.வருகின்ற சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சற்று மந்தமாக செயல்பட்டு வருகின்றன.ஆனால் கமலோ இதற்க்கு நேர்எதிர்மாறாக சுறுசுறுப்பாக தனது கட்சியின் ஆட்களை சந்தித்து வந்தும்.தனது பிரச்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியும் வேகமெடுத்துள்ளார் கமல். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. சிகப்பு நிறத்தில் பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு வேனில், எந்த இடத்திலும் கமலஹாசனின் படம் இடம் பெறவில்லை. கட்சியின் பெயரும், சின்னமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தனி மனிதனை முன்னிலைப்படுத்தும் அரசியலை கமல் முன்னெடுக்கவில்லை, என்று அவரது கட்சியினர் வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற போகிறது. திமுக மற்றும் அதிமுகவின் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எடப்பாடி தலைமையில் அதிமுகவும், ஸ்டாலின் தலைமையில் திமுகவும் தேர்தலை சந்திக்கின்றன.இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியவை தனியாக சந்திக்க உள்ளன. இதேபோல் டிடிவி தினகரனின் அமமுகவும் தனியாக சந்திக்க உள்ளன. இதில் டிடிவி தினகரன், கமல் ஹாசன், சீமான் இவர்கள் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை.இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்.

கமலஹாசன் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பார்? என்பது பற்றிய பேச்சு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில்,மக்களுடனே கூட்டணி என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் யாருடனும் கூட்டணி அமைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் 234 தொகுதிக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்ய வசதியாக சொகுசு வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வேனில் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இருந்தபோதிலும், எந்த இடத்திலும் கமல் படம் இடம் பெறவில்லை. கட்சியின் சின்னமும், கட்சியின் பெயரும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.பொதுவாக எந்த கட்சியின் தலைவர்கள் பிரச்சார வாகனமும், அதன் தலைவரின் படமே பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த வேனில் அப்படி இல்லை.அதுவும் சின்னம் மட்டுமே இருக்கிறது. கமல் ஏன் தனது படத்தை பிரச்சார வாகனத்தில் தவிர்த்தார் என்பது ஆச்சர்யமான ஒன்று.

மக்களின் நீதி என்பதே பிரதானமாக உள்ளது. இவரது பிரச்சார வாகனத்தை பலரும் பாராட்டுகிறார்கள்.எனினும் சிலர் இந்த வாகனம் தீயணைப்பு வாகனத்தின் மாடலில் உள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள். எது எப்படியோ அரசியல் மாற்றத்தை தருகிறோம் என்று புறப்பட்டுள்ள கமல் இந்த வாகனத்தில் தான் வலம் வரப்போகிறார். ஒவ்வொன்றிலும் வித்தியாசமான அணுகுமுறையுடன் செயல்படும் கமல் பிரச்சார வாகனத்தில் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்ட தகுந்ததே.அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.இரு திராவிட கட்சிகளுக்கு அடுத்தபடியாக,கமலின் “மக்கள் நீதி மய்யம்” வாக்கு சதவிகிதத்தில் உள்ளது.இம்முறையும் வாக்குகளை அள்ள வாய்ப்புள்ளது.புதிய அரசியல்,புதிய மாற்றம்,மக்களுக்கு நல்லது நடந்தால்,தமிழக மக்கள் யாரைவேண்டுமானாலும் முதல்வராக்குவர்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top