உச்ச நீதிமன்றம் – இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை கண்டு வருகிறோம்.
உச்ச நீதிமன்றம்: இது நாட்டின் உயரிய நீதிமன்றம் ஆகும். இந்த நீதிமன்றம் ஜனவரி 28, 1950 அன்று அமைக்கப்பட்டது. இது மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அசல் வழக்குகள் மற்றும் முறையீடுகள் இரண்டும் இங்கு நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் இந்திய தலைமை நீதிபதி மற்றும் 25 நீதிபதிகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 124-147 கட்டுரைகள் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை வகுக்கின்றன.
நில சீர்திருத்தம், தேசிய அவசர நிலை போன்ற வழக்குகளை இது தீர்மானிக்கும். உதாரணமாக 2ஜி ஸ்பெக்ட்ரம், ஓரினசேர்க்கை மறுதலித்தல், மூன்றாம் பாலினம் அங்கீகாரம், அயோத்தி சர்ச்சை வழக்கு போன்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தது இந்த நீதிமன்றம் தான்.
Also Read: CITIZENS AWAKE