இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை கண்டு வருகிறோம்.
லோக் அதாலத் :
இதனை மக்கள் நீதிமன்றம் என்றும் அழைக்கலாம். பிற நீதிமன்றங்களில் நமது வழக்குகளை வழக்கறிஞர்களின் மூலம் நடத்தலாம். வழக்கறிஞர் நமது வழக்கை விவாதித்து நீதி பெற்று தருவார். நீதிபதி வழக்கை விசாரித்து நீதி வழங்குவார். ஆனால், லோக் அதாலத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தேவையில்லை. நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு நாமே நீதிபதியிடம் வாதிடலாம். அதற்கு, நமது பிரச்சினைகளுக்கான மனுவை முதலில் அளிக்கவேண்டும். பின்னர், அதனை நீதிபதி விசாரித்துவிட்டு எது சரியோ அதனை தீர்ப்பாக வழங்குவார்.
அந்த பிரச்சினை சமூக பிரச்சினை, விவாகரத்து போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசமாக தீர்ப்பு வழங்குவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இது ஒரு இலவச நீதிமன்றம் ஆகும். ஆனால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக மட்டுமே இங்கு வழக்குகள் விசாரிக்கப்படும்.
Also Read: CITIZENS AWAKE