இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை கண்டு வருகிறோம்.
உயர் நீதிமன்றம் : உயர் நீதிமன்றங்கள் மாநில அளவில் மிக உயர்ந்த நீதித்துறை ஆகும். பிரிவு 214 உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறிப்பிடுகிறது. இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்கள் நடத்த முடியாத வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. உயர் நீதிமன்றங்கள் கீழ் நீதிமன்றங்களிலிருந்து மேல்முறையீடு செய்யலாம். இந்திய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்த பின்னர் இந்திய ஜனாதிபதியால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
Also Read: CITIZENS AWAKE