இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை காண்போம்.
இந்திய நீதிமன்ற அமைப்பு இந்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட, நகராட்சி மற்றும் கிராம மட்டங்களில் உள்ள துணை நீதிமன்றங்களை உள்ளடக்கியது.
நீதிமன்றங்களின் படிநிலைகள் :
அடிமட்ட விஷயங்களை பரவலாக்கவும் உரையாற்றவும் இந்திய நீதித்துறை பல நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை அமைப்பு பின்வருமாறு:
1. உச்ச நீதிமன்றம் (Supreme Court).
2. உயர் நீதிமன்றங்கள் (High Courts).
3. மாவட்ட நீதிமன்றங்கள். (District Courts)
a. சிவில் நீதிமன்றங்கள் (Civil Courts)
b. குற்றவியல் நீதிமன்றங்கள் (Criminal Courts)
4. லோக் அதாலத் / கிராம நீதிமன்றங்கள் (Lok Adalat / Village court)
5. தீர்ப்பாயங்கள்(Tribunals).
Also Read: CITIZENS AWAKE