இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை கண்டு வருகிறோம்.
மாவட்ட நீதிமன்றம் : வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மக்கள் அடர்த்தி அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அல்லது மாவட்டங்களின் குழுவிற்கும் இந்திய மாநில அரசுகளால் மாவட்ட நீதிமன்றங்கள் நிறுவப்படுகின்றன. மாவட்ட நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. மேலும், அவை உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுவாக இரண்டு வகையான நீதிமன்றங்கள் உள்ளன:
மாவட்ட நீதிமன்றங்கள். (District Courts)
a. சிவில் நீதிமன்றங்கள் (Civil Courts)
b. குற்றவியல் நீதிமன்றங்கள் (Criminal Courts)
மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாவட்ட நீதிபதிகள் தலைமை தாங்குகின்றனர். வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் உதவி மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்படலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்படும்.
Also Read: CITIZENS AWAKE