நீதித்துறை அமைப்பு : குற்றவியல் நீதிமன்றம் | விழித்தெழு மக்களே : Chennaiyil

குற்றவியல் நீதிமன்றங்கள்

மாவட்ட நீதிமன்றம் : வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மக்கள் அடர்த்தி அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அல்லது மாவட்டங்களின் குழுவிற்கும் இந்திய மாநில அரசுகளால் மாவட்ட நீதிமன்றங்கள் நிறுவப்படுகின்றன. மாவட்ட நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. மேலும், அவை உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுவாக இரண்டு வகையான நீதிமன்றங்கள் உள்ளன:

மாவட்ட நீதிமன்றங்கள். (District Courts)

     a. சிவில் நீதிமன்றங்கள் (Civil Courts)

     b. குற்றவியல் நீதிமன்றங்கள் (Criminal Courts)

குற்றவியல் நீதிமன்றம் : 

குற்றவியல் சட்டம் சமூகத்திற்கு எதிரான குற்றங்களைக் கையாள்கிறது. இது செய்த குற்றத்திற்காக அதற்கு ஏற்றதுபோல் பல்வேறு வகையான தண்டனைகளை நிறைவேற்றுகிறது. குற்றவியல் சட்டம் கொலை, கற்பழிப்பு, தீ வைத்தல், கொள்ளை, தாக்குதல் போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்கும். குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு வழக்கைத் தொடங்க, ஒரு மனுவை நேரடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, மாறாக புகாரை முதலில் போலீசில் பதிவு செய்ய வேண்டும், மேலும் குற்றத்தை காவல்துறை விசாரிக்க வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம். குற்றவியல் சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். 

 

Also Read: CITIZENS AWAKE

 
Also Watch :
 

 
 
 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top