Main Menu

What’s New?

Connect With Us

ஜெ.வின் மரணம்|மீண்டும் சர்ச்சையில்|ராம் மோகன் ராவ்|

Read Carefully

SHARES

தொடர்ந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா.2016ல் மறைந்தார்.அவரின் மறைவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.குறிப்பாக அவருக்கு அதிகளவில் ஸ்டிராய்டு மாத்திரைகளை கொடுக்கப்பட்டுள்ளன,அவரின் கால்கள் வெட்டப்பட்டுள்ளன,அவர் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பே இறந்துவிட்டார்.அதனை மறைத்து,அவரின் உடல் அழுகாமல் இருக்க சில ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன,அவரின் கொடா நாடு வீட்டில் உள்ள வேலை ஆட்களின் படுகொலை சம்பவம்,போன்ற பலவும் சர்ச்சைக்குள்ளானது.அன்று,முதல் இன்று வரை ஜெயலலிதாவின் மரணங்களின் மறுமங்கள் நீடித்து வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில்,கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறில் மணி மண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் ஏதோ நடந்திருக்கிறது.என்ன நடந்தது? யார் என்ன நினைத்தார்கள்?என்பது சரியாக தெரியவில்லை.நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை.ஆனால்,உள்ளே ஒரு சதி நடந்துள்ளது.என்னால் அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது.நேரம் வரும்போது நானே கூறுவேன்,என்றார்.முன்னாள் தலைமைச் செயலரின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக தொடங்கி இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக உள்ளார்.

அடுத்த சட்டசபை தேர்தலிலும் எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளது அதிமுக தலைமை.அடுத்ததாக அதிமுகாவில் என்ன நடக்கப்போகிறது? சட்டசபை தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி? சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகாவில் மாற்றம் ஏற்படுமா?கடைசி நேரத்தில் முதல்வர் வேட்பாளரை மாற்றக்கூடுமா? ஜெயலலிதா மரணத்தில் உண்மைகள் வெளிவருமா?போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறது chennaiyil.com

Top