ஜெ.,இருந்திருந்தால் இப்படி நடக்குமா?|கம்பத்தில் ஜெயப்ரதீப்!

ஜெய பிரதீப்
லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி தோற்றது. ஆனால், தேனியில் மட்டும் ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதுவும், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வீழ்த்தி. சூட்டோடு சூடாக மகனை மத்திய அமைச்சராக்கும் முயற்சி பலன் தரவில்லை.
என்றாலும் இளைய மகன் ஜெய பிரதீப்பை, சட்டசபை தேர்தலில் களமிறக்க பன்னீர்செல்வத்துக்கு ஊக்கமளித்தது அந்த வெற்றி. திமுக வை போல, அதிமுகவும் வாரிசு அரசியல் வலையில் சிக்கி விட்டதா? என்று கேட்டால், ஒரு மகனை டெல்லிக்கும், இன்னொருவரை சென்னைக்கும் அனுப்பி மக்கள் சேவை புரிய துணை முதல்வர் விரும்புவதாக ஆதரவாளர்கள் ஆறுதல் சொல்கின்றனர்.
அண்ணன் தேனி என்றார், தம்பி விலகி நிற்க முடியுமா? பக்கத்தில் உள்ள கம்பத்தில் களம் ஏறுகிறார் ஜெய பிரதீப். அந்த தொகுதியில், அடங்கிய உத்தமபாளையத்தில் பன்னீரின் மாமனார் வீடு இருக்கிறது. இந்த மகனும் அடுத்துள்ள சின்னமனூர் பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார். உறவினர்கள் ஓட்டு போட்டாலே எண்ணிக்கை எகிறும் என்றால், யாருக்குதான் ஆசை வராது?
சாதி ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதிகள் இது ஆனால் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ஜக்கையன் எளிதில் விட்டுத்தர மாட்டார் என்கின்றனர் கட்சியினர் அவரை சரிக்கட்டினால் ஜெயபிரதீப் போட்டியிட முடியும்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இத்தகைய வாரிசு அரசியலை ஊக்கம் செய்திருப்பாரா? அல்ல இவர்களுக்கு இத்தகைய தைரியமாவது வந்திருக்குமா?
மேலும் படிக்க: