Main Menu

What’s New?

Connect With Us

பூதாகரமாக வெடிக்கும் மூக்குத்தி அம்மன் படம்|குறிப்பிட்ட மதத்தின் சாமியாரை மட்டும் விமர்சிப்பதா?

Read Carefully

SHARES

“மூக்குத்தி அம்மன்” இப்பெயரை கேட்டல் ஏதோ பக்தி படம் போல் தோன்றும்.ஆனால் அது தான் இல்லை,இது முழுக்க முழுக்க போலி சாமியார்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ள படம்.”நல்ல கருத்துள்ள படம் தானே”? என்று உங்களுக்கு தோன்றும்.எஸ்…நல்ல படம் தான்,ஆனால் போலி சாமியார்கள் “இந்து மதத்தில்” மட்டும் தான் இருக்கிறார்களா என்ன? அனைத்து மதத்திலையும் போலிசாமியார்கள் இருக்கிறார்களே? அதனையும் படத்தில் காட்டி இருக்க வேண்டும்மல்லவா? ஏன் காட்ட வில்லை? இது தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி,நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து,கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியாகமால்,ஓடிடியில் வெளியாகின.இது வரை ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் மட்டும் தான் அதிக வசூலாளித்ததாக கேள்வி.இது ஒருபுறமிருக்க,படத்தில் இந்து மதத்தை குறிப்பாக இந்து மதத்தில் இருக்கின்ற சாமியார்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு அட்டாக் செய்துள்ளனர் படக்குழுவினர்.இந்து மதத்தை பொருத்தவரையில்,கடவுள் என்பவன் ஒருவனே! அவனுக்கு உருவம் கிடையாது என்பதனையே குறிக்கிறது.கிருஷ்ணா,ராமா,பிள்ளையார்,முருகன் போன்ற கடவுள்களை இந்து மதத்தில் உள்ள மகான்களும்,ரிஷிகளும்,முனிவர்களும்,சித்தர்களும் கடவுள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நமக்கு காட்டியவர்கள்.இது தெரியாது திருப்பதி வெங்கடாஜலபதிக்கும்,மூக்குத்தி அம்மனுக்கும் சண்டை வருவது போல் காட்சிகளை அமைத்துள்ளன.

அம்மனை பார்த்து [நயன்தாரா],”உங்க முடி கலர் ஏன் மாறி இருக்கு?,என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்பார்,”உப்பு தண்ணில அபிஷேகம் செய்ததால் இப்படி ஆயிடுச்சு” என்று நயன்தாரா கூறுவார்.இது காமெடிக்காக எடுக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும்,அம்மனை வேண்டும் மக்களில் மனதை புண்படாதா?பிள்ளையார் பால் குடித்தது,புற்றில் பால் வருவது போன்ற விஷயங்கள் தவரே! அதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஜீசஸ் கண்ணில் ரத்தம் வருகிறது,என்னும் செய்தியும் வந்ததே? அது ஆர் .ஜே.பாலாஜிக்கு தெரியாதா?அல்லது மறைத்து விட்டாரா?சில போலி சாமியார்கள்,கடவுள் பெயரில் சம்பாதித்தும்,இடங்களை ஆக்ரமித்தும் இருக்கிறார்கள்,உண்மைதான்.அவர்களை அடையாளம் கண்டு,கடவுளே காட்டி கொடுத்துள்ளார்.உதாரணத்திற்கு,பிரேமானந்தா,நித்தியானந்தா,பங்காரு அடிகளால்,ஜெயேந்திரர்,வித்யாமனோகராதீர்த்தர்,இன்னும் எண்ணெற்ற போலி சாமியார்களின் வேடம் கலைந்துள்ளது.ஆனால் ஹிந்துக்களில் கோவில் சொத்துக்களையும்,உண்டியல் பணத்தையும் தமிழக அரசு மற்றும் அறநிலைத்துறை எடுத்துக்கொண்டு நாசம் செய்து வருகின்றதே? அது பாலாஜிக்கு தெரியாதாயென்ன?சரி…வசூல் ஆனா உண்டியல் பணத்தையாவது மக்களுக்கும்,மூக்குத்தி அம்மன் கோவில் போல் பாழடைந்து கிடைக்கும் கோவிலின் பராமரிப்புகளுக்கு செலவுகளை செய்கிறார்களா?அதுவும் இல்லை.

Jesus

கோவில் உண்டியல் பணத்தை அரசு எடுத்துக்கொள்கிறது.கிருத்துவ கோவில்கள்,மற்றும் பிற மத கோவில்களில் உண்டியல் பணமோ,அல்லது வசூல் ஆகும் பணமோ எங்கே செல்கிறது?அந்த பணத்தைக்கொண்டு அவர்களின் மதத்தை வளர்கின்றார்கள்,மத மாற்றம் செய்ய வைக்கின்றார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தான் வளரும்.வளர்ந்துக்கொண்டும் இருக்கும்.இது பாலாஜிக்கு தெரியாத?அனைத்து சாமியார்களும் போலி என்று வசனங்கள் இடம் பெற்றுள்ளது.உடுப்பியில்,ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் உள்ளது.இங்கு 8 மடங்கள் உள்ளன,இந்த 8 மடத்திற்கும் ஒவ்வொரு பீடாதிபதிகள் அதாவது சாமியார்கள் இருக்கிறார்கள்.இவர்கள்,இரு வருடத்திற்கு ஒரு முறை சுழற்ச்சி முறையில் கோவிலை நிர்வாகம் செய்ய வேண்டும்.அப்போது,தேர் போன்று விறகுகளினால் அடுக்கப்பட்டு இருக்கும்.இதனை இரு வருடத்திற்குள்,மக்களுக்கு அன்னதானம் செய்து காலி செய்ய வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் நிர்வாகம் சரியில்லை என்று அர்த்தம்.ஆகையால் 24 மணிநேரமும் இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.ரம்ஜான் அன்று “ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில்”இஸ்லாமியர்களை அழைத்து ப்ரசாதங்கள் வழங்கப்படுவது வழக்கம். இது பாலாஜிக்கு தெரியவில்லையோ?

சாமியார்களுக்கு ஆதரவாக பேசவில்லை,அதே சமயத்தில் எல்லா சாமியார்களும் போலியானவர்கள் அல்ல!ஆனால்,சாமியாரிடம் “என்ன கேரண்டி”? என்று ஆர்.ஜே.பாலாஜி கூறும் வசனம் நம்மை கண்டிப்பாக சிந்திக்க வைக்கிறது.போலி சாமியார்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்,இதனை மறுக்க முடியாது.இந்நிலையில்,மூக்குத்தி அம்மன் படத்தில் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடித்துள்ளனர், என்ற குற்றச்சாட்டு இந்தப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.அதாவது இந்தப் படம் OTTயில் வெளியாவதற்கு முன்பு,போலி கிறிஸ்தவ மதபோதகர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை கிண்டலடித்து இடம்பெற்ற காட்சி ஒன்றை யூடியூபில் வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை.மேலும் பாலாஜி அந்தக்காட்சியை பாகுபாடு பார்த்து தான் நீக்கினார் என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், ‘மற்ற மதத்தைச் சேர்ந்தவரின் உணர்வுகளை மதிக்கும் நீங்கள் இந்து மதத்தையும் அவர்களுடைய உணர்வுகளையும் ஏன் மதிக்க தவருகிறீர்கள்?’ என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இவ்வாறு கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து அந்தக் காட்சியை யூட்யூப்பில் இருந்து கூட நீக்கி விட்டனர் படக்குழுவினர்.மேலும் ஆர்ஜே பாலாஜிக்கும் ஐசரி கணேஷ்கும் பெரும்புள்ளி ஒருவர் போன் செய்து அந்த காட்சியை நீக்கும்படி கேட்டுக் கொண்டதால்தான், படத்திலிருந்தும் யூடியூப்பிலிருந்தும் அந்த காட்சியை நீக்கி விட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.எனவே ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் படத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்ததால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.எது எப்படியோ,இதுபோல கடவுள்,மத,சாதி,சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்கும் போது,நடுநிலையுடன் கையாள்வது அவசியம்…

 

Top