எனக்கு தடல்புடலான விருந்து வேண்டாம்…! இறையன்பு ஜ.ஏ.எஸ்.

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திரு.மு.க.ஸ்டாலின். பொறுப்பேற்று ஒரு மாத காலமே ஆகிய நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் வரவேற்பை பெற்று வருகிறார். அதில் ஒன்றுதான் தமிழகத்தில் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. மேலும், தமிழகத்தின் தலைமை பொதுச்செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இவர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆய்வு பணிக்காக மாவட்டவாரியாக சென்று வருகிறார். தற்போது, அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “ஆய்வு பணிக்காக நான் மாவட்டங்களுக்கு வரும்போது எனக்கு தடல்புடலான விருந்து, ஆடம்பரமான விருந்தை தயார் செய்ய வேண்டாம். மேலும், சாதாரண உணவை தயார் செய்தால் மட்டுமே போதுமானது என தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு ஆய்வு பணிக்காக நான் மாவட்டங்களுக்கு வருகை புரியும்போது அந்தந்த மாவட்ட நிர்வாகம் சிறப்பான சாப்பாட்டை தயார் செய்யவேண்டாம் என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக காலை மற்றும் இரவு வேளைகளில் எளிய முறையில் உணவு தயார் செய்யவும். மேலும், மதியம் 2 காய்கறிகளுடன் சமைத்த சைவ உணவை தயார் செய்தால் போதுமானது என அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை செயலாளரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த காலத்தில் இப்படியொரு அரசு அதிகாரியா? அரசு பணத்தை வீணடிக்கும் அதிகாரிகள் மத்தியில் இப்படி இவர் செய்திருப்பது மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கும். அடடே! இது நம்ம லிஸ்டலையே இல்லையே…

 

மேலும் படிக்க: 

வங்கி தேர்வு சில முக்கிய அறிவிப்பு!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top