RCB அணி அபார வெற்றி : ரிஷப் பண்ட் செய்த மிகப்பெரிய தவறு.

ஐ.பி.எல். 2021 போட்டி இந்தியாவில் உரிய பாதுகாப்புடன் நடந்து வருகிறது. 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை, 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 22-வது லீக் போட்டி நேற்று பெங்களூரு அணிக்கும் டெல்லி அணிக்கும் அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் விரைவிலேயே அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய ரஜத் பண்டிதர் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  திடீரென  மேக்ஸ்வெல் ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர், களமிறங்கிய ஏ.பி.டி வில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில்,20 ஓவர் முடிவில் RCB அணி 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது.

அடுத்ததாக, டெல்லி அணி 172 என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்கத்தில் பிரித்வீ ஷா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அடுத்ததாக களமிறங்கிய ஹெட்மெயர் 53*(25) அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். ஆனால், மறுமுனையில் ரிஷப் பண்ட் 58*(48)நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவரது இந்த நிதானம் அணியின் வெற்றியை பாதித்தது. கடைசி பந்தின் முறையை ஹெட்மெயரிடம் கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அணியின் கேப்டனான பண்ட்டுக்கு  இது ஒரு பாடமாக இருக்கும் என்று நெட்டிசன்களும் கூறிவருகின்றனர். ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியுற்றது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இல்லை என்றே கூறலாம்.  இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி மூன்றாவது இதத்திற்கு தள்ளப்பட்டது. மேலும், பெங்களுரு அணி முதல் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.

மேலும் படிக்க:

 தமிழக மக்களுக்கு மழிச்சியான செய்தியை வெளியிட்டார் சுகாதார செயலாளர்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top