லேப்டாப்,செல்போன் கதிர்வீச்சால் குழந்தையின்மை|அதிர்ச்சி தகவல்|

60-70களில் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றேடுத்தனர்.அதற்கும் முன்னர் ஐந்து,ஆறு ஏன் பத்து குழந்தைகளை கூட பெற்றுக்கொள்வார்கள்.ஆனால் நாகரிகம் என்கின்ற பெயரிலும்,உண்ணும் உணவில் உரங்களை சேர்ப்பதாலும் உடல் நலம் குன்றி குழந்தை இன்மை ஏற்பட்டு வருகிறது.தற்போது புதிய சிக்கலாக,நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளே சிலரின் குழந்தை இன்மைக்கு காரணமாகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமானமாவதில்லை.

கம்ப்யூட்டர் பணியாளர்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. சாதாரணமாக நடக்கக்கூட நேரமில்லாமல் வாகனங்களில் போய் வருகிறார்கள்.இப்படி ஒட்டுமொத்தமாக உடலியக்கம் குறைந்துவிடுகிறது.சிந்தனை முழுவதும் வேலையிலேயே இருப்பதால் புத்துணர்ச்சியூட்டும் ஹார்மோன்கள் உறங்கிவிடுகின்றன. உடல்சூடு, சோம்பல், தூக்கமின்மை என வேறு சில கோளாறுகள் அவர்களை சராசரி மனிதனைப்போல இயங்க விடுவதில்லை.

லேப்டாப்புகளை மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அவர்களது உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. இதனால் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைவதாகவும், பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்பார்ட்மென்ட்டுகளில் வசிக்கும் பெண்களது உடலில் சூரியஒளி படாததால் அவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆண்கள் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே அடைந்துகிடப்பதால், அவர்களது உடலில் வெயில்படாததால் விந்தணுக்களின் வீரியம் குறைந்து குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது.

இன்றைக்கு திருமணமான எல்லோருமே உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகே தகுதியாகிறார்கள். அதிலும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை நம் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின்மை பிரச்சினை மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top