Main Menu

What’s New?

Connect With Us

Indian Film News…

Read Carefully

SHARES

விஜய் டிவியில் ஒளிபரப்பான “லொள்ளுசபா”என்ற காமெடி நிகழ்ச்சியை இயக்கியவர் ராம்பாலா.இவர் சந்தனம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தையும் இயக்கினார்.இவர் தற்போது மிர்ச்சி சிவா,நிக்கிகல்ரானி,ஆனந்தராஜ்,போன்ற நடிகர்களை வைத்து இயக்கி வருகிறார்.

இயக்குனர் முத்தையா என்றாலே சாதியை வைத்து படம் இயக்குபவர் என்கின்ற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கும்.இவரும் அதற்கு சான்றாக மருது,தேவராட்டம்,கொடிவீரன்,போன்ற ஜாதிய பின்னணியில் படங்களை இயக்கினார்.கார்த்தியை வைத்து இவர் இயக்கிய “கொம்பன்”படம்,ரிலீஸ் சமயத்தில் ஜாதி ரீதியிலான பஞ்சாயத்தை சந்தித்தது.இப்போது மீண்டும் கார்த்தியை வைத்து படம் இயக்கபோவதாக கேள்வி!

சித்தார்த் நடித்த “அவள்”,நயன்தாரா நடித்துவரும்” நெற்றிக்கண்” படங்களின் இயக்குனர் மிலிந்த்ராவ்.இவரது அடுத்த படம் ஒரு த்ரில்லர்.தமிழ்,தெலுங்கு,இந்தியில் ரிலீஸாகிறது.ஹீரோவாக நடிப்பவர்,பாகுபலி டாணி.

ஓம்ராவத் இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு,இந்தி உள்பட பல மொழிகளில் உருவாகும்“ஆதிபுருஷ்”படத்தில் ராமராக பிரபாஸும்,ராவணனாக சயீப் அலிகான் என்றும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் படு ரகசியமாக திண்டுக்கல் பகுதிகளில் சுசீந்திரன் இயக்கத் தில் ஜெய்,ஆதி,பிசியாக நடித்து வருகின்றன.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன்,சாவித்திரி,கே.ஆர்.விஜயா,நடித்த காலத்தால் அழியாத காவியமான“சரஸ்வதி சபதம்”வெளியாகி நேற்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.படத்தின் ஸ்டில்கள்,காட்சிகளை சமூக வலை தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடினர்.

ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம்“குட்டி லவ் ஸ்டோரி”கவுதம்மேனன்,வெங்கட்பிரபு,ஏ.எல்.விஜய்,நலன்குமாரசாமி,என 4 பேர் இயக்குகின்றனர்.நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வருமாம்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும்“பொன்னியின் செல்வன்”படம் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப் பட்டது.மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த முடிவு செய்து இருக்கிறாராம் மணி.அதே வேளையில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஐஸ்வர்யா ராய்,படப்பிடிப்புக்கு வருவாரா என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top