இந்திய அணிக்கு புதிய சிக்கல் : WTC இறுதி போட்டியில் விளையாடுமா இந்தியா?

india vs newzealand wtc final

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்(WTC) இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதன்பிறகு, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. அதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள  போகிறது. சுமார் மூன்றரை மாதம் வரையில் அங்கேயே இந்திய அணி தங்கப்போகிறது. மூன்றரை மாதம் என்பதால் வீரர்களின் குடும்பத்தையும் உடன் அழைத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிக்கான இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன.  விராட் கோலி தலைமையில் அஜின்கிய ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர். மேலும், ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்பரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.  மேலும், கே.எல்.ராகுல், விரிதமான் சஹா இருவரும் உடற்தகுதி பொறுத்து அணியில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இம்மாதம் இறுதியில் அவர்கள் 8 நாட்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதனை தொடர்ந்து இந்திய அணி ஜூன் 2-ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. மேலும், அங்குசென்று 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பிறகே, வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு, டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில்,இந்திய அணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் இருந்ததை விட தற்போது அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த சூழலை அந்நாட்டு கிரிக்கெட் போர்டும், நமது BCCI -ம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்திய அணி ஜூன் மாதம் தான் இங்கிலாந்து செல்லவுள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் IPL போட்டி  நிறுத்தப்பட்டது. அதனை நாங்கள் நடத்தி தருகிறோம் என்று சொன்ன இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இங்கிலாந்திலும் அதேபோல் நோய் பரவல் அதிகரிப்பதால் இந்திய அணி WTC இறுதி போட்டியில் விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மேலும் படிக்க: 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top