“பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போகும்…” : இளையராஜா புது ஸ்டூடியோ திறப்பு.
இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருபவர். அவர், இதுவரை 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இசைஞானி, மேஸ்ட்ரோ, ராஜா, இளையராஜா என மக்களால் அழைக்கப்படுபவர்.
இதுவரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோஸில் தான் பெரும்பாலும் இளையராஜா தனது பாடல்களை ரெக்கார்டிங் செய்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சில சம்பவங்களால் பிரசாத் ஸ்டூடியோஸ் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை. அதனால், தனக்கென தனி ரெக்கார்டிங் ஸ்டூடியோ தொடங்க திட்டமிட்டார் இளையராஜா.
அதற்காக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.தியேட்டரை விலைக்கு வாங்கி அங்கு தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவை அமைக்க திட்டமிட்டார். அதன்படி, நேற்று அதன் பூஜை மற்றும் முதல் பாடல் பதிவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து எடுக்க இருக்கும் புதிய படத்தின் பாடலை ஒலிப்பதிவு செய்தார் இசைஞானி.
இந்த பூஜை நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரியும் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியும் பூஜை நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிமாறன் – சூரி படத்தின் பாடல் பதிவு நடைபெற்ற பின்னர் இளையராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதில், “ஒரு காலத்தில் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து துறைகளின் படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெறும் என்று கூறினார். மேலும், ஏ.வி.எம்., விஜயா – வாஹினி, ஜெமினி, நெப்டியூன், சாரதா, பரணி, கற்பகம், என்று பல்வேறு ஸ்டுடியோக்களும் இருந்தன. அவையெல்லாம் இப்போது காணாமல் போனது. அதேபோல், வரும் காலத்தில் பிரசாத் ஸ்டுடியோவும் காணாமல் போவதற்காக நான் வெளியில் வந்துவிட்டேன் என்று கூறினார். என்னை பிரசாத் ஸ்டுடியோவினுள் அனுமதிக்காததால் எனக்கு தனியாக ஸ்டூடியோ தேவைப்பட்டது. அதற்காக இதனை அமைத்தேன் என்றார். வெற்றி மாறனின் படத்தின் பாடம் பதிவும் நடைபெற்றது என்று கூறினார். இன்னும் சில பணிகள் முடிவடையாததால் விரைவில் முடிந்து முழு வீச்சில் ரெகார்டிங் பணி நடைபெறும் என்று கூறினார்.”
மேலும், பத்திரிக்கையாளர் கேள்வி…”பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறியதில் உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா?
இளையராஜா : “கடந்த கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட முடியுமா? என்று கேட்டார். அதுதான் வாழக்கை…வாழ்க்கைனா எல்லாம் சேர்ந்துதான் இருக்கும். இதையெல்லாம் நாம் தாண்டிதான் போகணும். எல்லாத்தையும் எதிர் கொள்ளணும், எல்லாமே சவால்தான், லட்சியத்தை நோக்கி ஓடணும் என்றார்.
மேலும் படிக்க:
Follow us on Facebook and Instagram: