கப்பு தாங்க முடியலை…வியா்வை துா்நாற்றத்தை சமாளிக்க வழிகள்:

akkul

 கப்பு தாங்க முடியலை…வியா்வை துா்நாற்றத்தை சமாளிக்க வழிகள்:

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உடலின் ஏர் கண்டிஷன் அமைப்பாக வியர்வை செயல்படுகிறது. வியர்வைக்கு வாசமில்லை ஆனால் சருமத்தின் மீது படிந்து காற்றில் உலரும்போது பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் வாசனை துர்நாற்றமாக உணரப்படுகிறது. அதை தடுக்க விலை உயர்ந்த பா்ஃபியூம்கள் பயன்படுத்தினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் பழைய வாசனை உடலில் இருந்து வெளிப்படுவதை தவிர்க்க இயலாது. உடலில் எக்ரைன் மற்றும் அபோக்ரைன் என இரண்டுவித வியர்வை சுரப்பிகள் உண்டு. முகம், கை, கால், மார்பு பகுதிகளில் சுரப்பது எக்ரைன், அக்குள் பிறப்புறுப்பு பகுதிகளில் சுரப்பது அபோக்ரைன்.

akkul

இரண்டாவது சுரப்பி இருபாலாருக்கும் பருவ வயதுக்கு பிறகு வளர்ச்சி அடைகிறது அதனால் குழந்தைகளிடம் வியர்வை நாற்றம் இருப்பதில்லை பெரியவர்கள் வியர்த்த இடத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது பெரும்பாலான நேரம் குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு வியர்வை வெளியேறாத காரணத்தால் உடல் உபாதைகள் உருவாகக்கூடும் அதேசமயம் அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதால் துர்நாற்றம் ஏற்படும் இந்த நிலையில் ஆரோக்கியத்தை காக்கவும் துர்நாற்றத்தை தவிர்க்கவும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதற்கான குறிப்புகளை பார்ப்போம்…

Topical-Odor-Fighters

1.) அக்குள் தூய்மை அவசியம்!

தினமும் இரு முறை குளிக்கலாம் வாசனை சோப்புகளை தவிர்த்து கிருமிகளை நீக்கும் சோப்பு வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம் குளித்தவுடன் அக்குளை நன்றாக துடைத்த பின்னர் ஆடை அணிய வேண்டும் மாதமிருமுறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் வளர்ந்த முடிகளை அகற்றும் பழக்கம் அவசியம் இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.

நோய் தீர்க்கும் வேப்பிலை உருண்டைகள்! | ட்ரூபால்

2.) வேப்பிலை

கிருமிகளை விரட்டி அடிக்க உதவும் வேப்பிலையை கொதிநீரில் போட்டு அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம் நறுமணம் கமழ நீாில் பன்னீர் கலந்தும் குளிக்கலாம்.

CDC updates number sickened by Salmonella from cucumbers

3.) நீர்ச்சத்து!

கோடையை சமாளிக்க தினமும் மூன்று லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும் இளநீர் மோர் பழச்சாறு பனை நுங்கு பதநீர் தர்பூசணி போன்றவற்றை உட்கொண்டாலும் நீர்சத்து அதிகரித்து வியர்வையை கட்டுப்படுத்தும்ASMR. Making Sandalwood paste from stick. - YouTube

4.) படுக்கைக்கு செல்லும் முன்…!

சந்தனத்தை நீர்விட்டு குழைத்து தினமும் இரவு நேரத்தில் அக்குளில் தடவலாம் சந்தனப் பொடியை தண்ணீரில் குழைத்தும் அக்குளில் பூசிக்கொள்ளலாம் இரவு குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் விலகும்.

இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே... - Simplicity

5.) நார்ச்சத்து உணவுகள்

கீரைகள் ஆரஞ்சு பழம் அன்னாசி பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் அவற்றிலுள்ள நார்ச்சத்து காரணமாக வியர்வை வெளியேற்றம் குறையும் உடலில் அதிக வியர்வை சுரக்கும் பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ளலாம் நீரில் கிருமிநாசினிகள் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் விலகி விடும்.

நன்றி: தினத்தந்தி

 

மேலும் படிக்க:

சென்னையில் கோவாக்ஸின் தடுப்பூசிகள் தட்டுப்பாடு|அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 அடுத்து என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு|கொரோனா 2 அலை:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top