மனைவி நற்பண்புகள் உடையவளானால் கணவனிடத்தில்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர், வீரமாமுனிவர் ஆவார். திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
6.) வாழ்க்கைத் துணைநலம்:
53.) இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
பொருள்:
மனைவி நற்பண்புகள் உடையவளானால் கணவனிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை. அவள் அவ்வாறு இல்லாதவளானால் அவனது வாழ்க்கையில் எதுவுமே இல்லை.
மேலும் படிக்க:
குடும்பத்திற்கேற்ற நற்குணங்கள் மனைவியிடம் இல்லையானால்…|தினம் ஒரு குறள்: