தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
குறளானது, ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
2.) வான் சிறப்பு:
16.) விசும்பின் துளிவீ ழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அாிது
பொருள்:
மேகத்திருந்து மழைத்துளி விழாவிட்டால்,பசும்புல்லின் நுனியைக் கூட காண முடியாது.
மேலும் படிக்க: பெய்யாமல் மக்களைக் கெடுக்க வல்லதும் மழை|தினம் ஒரு குறள்: