ரஜினி,தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்து விட்டார்.ரஜினி அரசியலுக்கு வந்தால் அரசியல் மாற்றம் நடந்திருக்குமா?தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருப்பார்? இனி அரசியலில் என்ன நடக்கும்? என்பதை பற்றி அலசுவோம்.
அரசியல் மாற்றம் நடந்திருக்கும்:
*மக்களின் பெயரில் கட்சியின் பெயர் புதியதாக வந்திருக்கும் உதாரணத்திற்கு:மக்கள் சேவை கட்சி(திராவிட பெயர் இல்லாது)
*234 தொகுதியிலும் புதிய வேட்பாளர்கள் நின்றிருந்திருப்பார்கள்.(மற்ற கட்சியில் சென்ற தேர்தலில் நின்ற வேட்பாளர்களே மீண்டும் நின்றிருக்க வாய்ப்பு உண்டு)
*அதிமுக,திமுக ஆகிய கட்சியை தவிர்த்து புதிய ஒரு கூட்டணி உருவாகியிருக்கும்.
*அதிமுக,திமுக என திராவிட கட்சிகளுக்கு மாற்று,மாற்று அரசியலை விரும்பும் மக்கள் ரஜினியை ஆதரித்திருப்பர்.
*கட்சி ஆரம்பிக்கப்பட்டு,தன் கொள்கைகளை ரஜினி அறிவித்திருந்தால்,அது மக்களுக்கு பிடித்திருந்தால் மேலும் பலர் ரஜினியை ஆதரித்திருப்பர்.
*பிற கட்சிகளை சேர்ந்த பலரும் ரஜினியின் கட்சியில் இணைந்திருப்பர்.
*பல சினிமா பிரபலங்களும் ரஜினி கட்சியில் சேர்ந்திருந்திருப்பர்.
*இவையெல்லாம் சரியாக நடந்திருந்தால்,ரஜினி ஆட்சியை பிடித்திருக்க வாய்ப்புண்டு.
தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருப்பார்:
*அப்படி ரஜினி ஒருகால் ஜெத்திருந்தால், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான,மக்களும் ஆவலோடு எதிர் பார்க்கும், யாருமே செய்யமுடியாத நதிநீர் இணைப்பு திட்டத்தை ரஜினி கொண்டு வந்திருப்பார்.காரணம்,அவரின் மனதில் இது நீண்டகாலமாக உள்ளது.அதற்கு தனது சொந்த செலவில் ரூ.ஒரு கோடியை ஒதுக்குவதாகவும் கூறியிருந்தார்.ரஜினியின் முதல் கையெழுத்தும் இதுவே இருந்திருக்கும்.
*முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்றதால்,மக்களுக்கு கூடிய வரைக்கும் நல்லது செய்யவேண்டும் என்ரே நினைத்திருக்க வாய்ப்புள்ளது.
*சாதி,மத சார்பற்ற ஆன்மீக அரசியல்.அது எப்படி இருந்திருக்கும் என்பதனை மக்களாகிய நாமும் அறிந்திருக்கலாம்.
*ரஜினி சினிமாக்காரர் என்பதால்,சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்து,அதற்கான தீர்வினை முன்னெடுத்திருக்கலாம்.
*வேண்டிய அளவிற்கு பணமும்,புகழும் ரஜினிக்கு உள்ளதால்,மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கு திரும்பி ஓரளவிற்கு செய்திருக்கலாம்.
*தண்ணீரை பற்றிய கவலை ரஜினி மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.அதனாலதான் தன் பிறந்த இடமாக இருந்தாலும் கர்நாட் டகாவை பல முறை ரஜினி எதிர்த்துள்ளனர்.ஆதனால்,குடிநீர் பிரச்னையை தீர்த்திருக்க வாய்ப்புண்டு.குறிப்பாக,தமிழக கர்நாடக மாநிலத்தில் இடையேயான தண்ணீர் பிரச்சனை மற்றும் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை ஆகியவைகளை தீர்த்திருக்க வாய்ப்புண்டு.
*மேலும்,தமிழக மக்களுக்கு அவ்வப்போது ரஜினியால் கொண்டுவரும் திட்டங்கள் என ரஜினியால் ஓர் புதிய மாற்றம் நடந்திருக்க வாய்ப்புண்டு.
*வாய்ப்புண்டே தவிர இவை அனைத்து கண்டிப்பாக நடக்கும் என்பதில்லை.
இனி அரசியலில் என்ன நடக்கும்:
*அதிமுகாவை பொருத்தவரை,தற்போதின் நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது.
*திமுக; தனது தேர்தல் பிரசாரம்,தேர்தல் வாக்குறுதிகளை மிக வேகமாக செயல்ப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.அதிமுகாவை விட திமுக ஒரு படி மேலே சென்றுக்கொண்டு இருக்கிறது.
*தேமுதிவாவை பொருத்தவரை;அதன் தலைவர் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கட்சி தள்ளாடி வருகிறது.இக்கட்சி தனித்து நிற்குமா?என்பது கேள்விக்குறியே.
*கமலின் மக்கள் நீதி மையம் அனைத்து கட்சிகளையும் முந்தி வேகத்தில் இருக்கிறார். பிரச்சாரம்,தேர்தல் வாக்குறுதியின் அறிக்கை,பேட்டிகள்,என படு பிஸியாக இருக்கிறார்.சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றியிருந்தார்.அவரின் அனைத்து வேட்பாளர்களும் படித்த,நன்கு வேலையில் குறிப்பாக மருத்துவர்கள்,ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ்;போன்றவர்கள் ஆதலால் இத்தேர்தலிலும் அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.
*சீமானின் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக தனித்தே போட்டியிடும்.அதன் கொள்கை மக்களுக்கு பிடித்திருப்பதாலும்,அதிமுக,திமுகவில் பெரிய ஆளுமை இல்லாததாலும்,மாற்று அரசியலை விரும்பும் மக்கள் சீமானுக்கு ஓட்டு போடலாம்.ஆனால் கமலை சீமான் சமாளிக்க வேண்டும்.சமாளித்தாலும் வெற்றி பெறுவது கடினமே.
*மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியே வைக்க விரும்பும்…
*எது எப்படியோ ரஜினிக்கு ஆதரவாகவோ அல்லது பிறரின் கட்சிக்கு ஆதரவாகவோ நாங்கள் (சென்னையில்.காம்) இல்லை.
*ஆனால்,யாரெல்லாம் வாக்குக்கு பணம் தருகின்றார்களோ அவருக்கு நீங்கள்(மக்கள்) ஆதரவாக இருந்துவிட வேண்டாம்!