ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நின்று நடத்துவானானால்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
5.) இல்வாழ்க்கை:
46.) அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்
பொருள்:
ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நின்று நடத்துவானானால், அவன் வேறுவழியில் சென்று பெறும் பயன் என்ன இருக்கிறது!
மேலும் படிக்க:
முன்னோர்கள்,கடவுள்,விருந்தினர்,சுற்றத்தார்,தான்….|தினம் ஒரு குறள்: