Main Menu

What’s New?

Connect With Us

பாஜகவில் நானா?|நடிகர் சந்தானம் விளக்கம்!

Read Carefully

SHARES

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க,கட்சிகளுக்குள் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.இந்நிலையில்,இயக்குனர் கண்ணன் இயக்கத்தில்,நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் “பிஸ்தோத்” இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது.இதையொட்டி சந்தானம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,நீங்கள் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்க்கு பதிலளித்த சந்தானம்,”இது “பிஸ்தோத்” படத்தை விட பெரிய காமெடியாக இருக்கிறது.நான் எந்த கட்சிலையும் சேரப்போவதில்லை.சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.இந்த வேலையை மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கிறேன்.எனக்கு அரசியல் தேவையில்லை.

நான் பாஜகவில் சேரப்போவதாக தொடர்ந்து வதந்திகள் பரவுவது ஏன் என்று புரியவில்லை என்றார்.மேலும் அவர் கூறியதாவது,“ஓ.டி.டியைவிட தியேட்டர்களில் படங்கள் வெளியாவதுதான் சிறப்பானது.ரசிகர்கள்,திரையில் நடிகர்களை பார்த்து கைதட்டி ரசிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.நடிகர்கள் மீது ரசிகர்கள்,அன்பு வைத்து இருப்பதும் அவர்களை கொண்டாடுவதும் தியேட்டர்களில் படங்கள் வெளியாவதன் மூலமாகத்தான் நடக்கிறது.ஓ .டி.டியில் இது கிடையாது.தியேட்டர்களில்,ரசிகர்கள் கொரோனா முன் எச்சரிக்கையோடு படம் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.எல்லா தியேட்டரிலும் கூட்டம் உள்ளது”என்றார்.

Top