மும்பாய் HYATT REGENCY ஹோட்டல் தற்காலிகமாக மூடல் : சம்பள நிலுவை என தகவல்.

மும்பையில் உள்ள பிரபல 5ஸ்டார் ஹோட்டல்  HYATT REGENCY. மும்பை விமானநிலையம் அருகில் உள்ளது இந்த ஹோட்டல். இதன் கிளை சென்னை அண்ணா சாலையிலும் ஒன்று உள்ளது. தற்போது மும்பை ஹோட்டல் ஊழியர்களின் சம்பள நிலுவை காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இரண்டாம் அலை நாடுமுழுவதும் அதிகரித்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் பாதிப்பு உச்சத்தை தொட்டது. இதன்காரணமாக, பல தொழில்கள், நிறுவனங்கள் முடங்கி போயின. அதில் ஒன்றாக தற்போது  HYATT REGENCY தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தால் வருமானம் இன்றி தவிக்கும் நிறுவனங்கள் பல இந்த முடிவை எடுத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமையன்று  ஹயாட் ரீஜென்சி  வெளியிட்ட அறிக்கையில் அதன் பொது மேலாளர் திரு.ஹாதீப் மர்வாஹ் கூறியதாவது. இந்த ஹோட்டல் Asian Hotels என்ற நிறுவனத்தின் கீழ் நடத்தப்படுகிறது. அங்கிருந்து நிதி வராததால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும்,அடுத்த அறிவிப்பு வரும் வரை ஹோட்டல் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க: 

 

பிரபல தொழிலதிபர் அங்கூர் பாட்டியா மறைவு!

 ஜூன் 21 முதல் இலவசம் பிரதமர் மோடி அறிவுப்பு!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top