Main Menu

What’s New?

Connect With Us

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை!

Read Carefully

SHARES

கொரோனா ஊரடங்கின் அனுபவங்கள்:

இந்த ஊரடங்கு என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .ஆனால் சிலர் பொருளாதார ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதை  அறிந்த போது, நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது .சென்னை வாசியாகிய நான், ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில்.. என் கணவர் மற்றும் குழந்தையுடன்  கணவரின் சொந்த ஊருக்கு வந்தேன் .இங்கே ரொம்ப அமைதியான நிம்மதியான சூழ்நிலை இருந்தாலும், என் வீடு என்பது சென்னையில் தான் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை. என் குழந்தை கொஞ்சம் அழுது கொண்டே இருப்பான் என்பதால் அவனுக்கு ஒரு வயது ஆன பிறகே இங்கே அழைத்து வர வேண்டும் என்று இருந்தேன்.ஆனால் தற்போதுள்ள சூழல் காரணமாக விரைவிலேயே வரும்படி ஆகிவிட்டது. ஆனாலும் கூட என் மாமியார் மாமனாருக்கு குழந்தையை சீக்கிரம் பார்க்கும் வாய்ப்பை இந்த ஊரடங்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

யாராக இருந்தாலும் தூரத்தில் இருக்கும் போது அன்பும் மரியாதையும் இருக்கும். பக்கத்தில் இருக்கும் போது அது சற்று குறைந்துவிடும் .இங்கும் அதே சூழ்நிலை தான். இருப்பினும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை எப்படி சரி செய்துகொள்வது?.. எப்படி ஒரு சஞ்சலத்தை உடனே பேசி தீர்த்துக்கொள்வது?.. என எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது இந்த ஊரடங்கு .அதுபோக , எதிர்வரும் காலங்களில்.. நான், என் கணவர் வீட்டாருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ எதை எல்லாம் கற்றுக்கொண்டால் நல்லது, எதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் நிம்மதி, எதை எல்லாம் விட்டு விட்டால் சிறப்பு– என்று தெரிந்துகொள்ளவும் அவர்களை புரிந்துகொள்ளவும்  இது ஒரு வாய்ப்பு.

நான் முன்பே சொன்னது போல கொஞ்சம் அடிக்கடி அழுது கொண்டே இருக்கும் என் குழந்தையை சென்னையில் இருக்கும் வரை என் அம்மா பார்த்துக்கொண்டாள்.இங்கு வந்த பின்பு அவனை முழுவதுமாக என்னால் பார்த்துக்கொள்ள முடியும் (சற்று சிரமம் என்றாலும் )என்பதை இந்த நாட்களில் உணர்ந்தேன் . .சுருங்கச்சொன்னால் நம்மால் முடியாதவைகளை ..கஷ்டம் என்றாலும் கடந்து செல்ல கற்றுக்கொடுத்துள்ளது இந்த ஊரடங்கு .கொரோனவைப் பொறுத்தவரை ஊரடங்கின் ஆரம்பத்தில் அதிக பயமும் அதிக விழிப்புணர்வும் இருந்தது .இப்போது போதுமான பயமும் போதுமான விழிப்புணர்வும் உள்ளது .ஊரடங்கிற்கான தீர்வு என்ன என்று காத்திருப்பதை விடவும் கொரோனாவிற்கான தீர்வு என்ன என்று தான் தற்போது எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் ஊரடங்கிற்கு ஒரு முடிவு வருகிறதோ இல்லையோ ..கொரோனாவிற்கு ஒரு முடிவு வர பிரார்த்திப்போம்.

 

-Lakshmisree,House Wife,Chennai

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top