வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு!

cm-stalin-cover

வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி -  Live chennai tamil

தமிழகத்தில் கொரோனா அலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

ரேஷன் கார்ட்: சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றலாம்... | nakkheeran

இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இந்த மாதத்திற்குரிய 2வது தவணையாக ரூ.2000/- நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பும் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

coronavirus test for m.k.stalin: கொரோனா டெஸ்ட் எடுத்த மு.க.ஸ்டாலின்... திக்  திக் நிமிடங்கள்! - m.k.stalin took coronavirus test two days before |  Samayam Tamil

இந்நிலையில், நாளை முதல் ஜூன் 14 வரை இதற்கான டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 15 முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2000/- நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரிசி கார்டுதாரர்கள் மொத்தம் 2.11 கோடி குடும்பத்தினர் பயன் அடைவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

TN Ration Shops: Tokens for 14 types of groceries starting tomorrow |  Ration Shops: 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன் | Tamil Nadu  News in Tamil

14 வகை மளிகைப்பொருட்கள் விபரம்:

கோதுமை மாவு-1 கிலோ

உப்பு -1 கிலோ

சர்க்கரை-500 கிராம்

உளுத்தம்பருப்பு- 500 கிராம்

புளி-250 கிராம்

கடலை பருப்பு-250 கிராம்

கடுகு-100 கிராம்

சீரகம்-100 கிராம்

மஞ்சள் தூள்-100 கிராம்

மிளகாய் தூள்-100 கிராம்

டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்)

குளியல் சோப்-1 (125 கிராம்)

சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: 

மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top