சென்னை முழுவதும் 6 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி வருகிறது.சாலைகள் முழுவது தண்ணீரில் மிதக்கிறது.அதிகாலை முதல் தொடங்கிய மழை,மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்து பெய்து வருகிறது.
குறிப்பாக:
✱கோடம்பாக்கம்
✱அண்ணாசாலை
✱போரூர்
✱கிண்டி
✱வேளச்சேரி
✱சைதாப்பேட்டை
✱நுங்கம்பாக்கம்
என பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது.அதே போல், காலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால்,சென்னையின் முக்கிய பகுதிகளும் தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.பல இடங்களில்,வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.சென்னையில் பல இடங்களில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது மழை நீர் தேங்கி வழிவதால்,இது தெரியாது யாரேனும் வாகன ஓட்டிகள் இதில் சென்று விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.இதனிடையே,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,சென்னை உள்பட தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர்,கள்ளக்குறிச்சி,அரியலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.மேலும் 12ம் தேதிவரை மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.