தமிழக மக்களுக்கு மழிச்சியான செய்தியை வெளியிட்டார் சுகாதார செயலாளர்:

radha krishnan

 தமிழக மக்களுக்கு மழிச்சியான செய்தியை வெளியிட்டார் சுகாதார செயலாளர்:

கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகம் குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

mask-pepole

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்வதைக் குறைத்துக் கொள்வது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.

முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

tamil nadu people wear mask

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால், கொரோனா பரவல் குறையும் நிலையை எட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் அளவில்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும்  கூறினார்.

 

மேலும் படிக்க: 

இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர் விளக்கம்:

முதல் சி.எம் யாருனு தெரியுமா?|யாரு? எந்த கட்சி தெரிஜிக்கணுமா?

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top