சென்னையில் கோவாக்ஸின் தடுப்பூசிகள் தட்டுப்பாடு|அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

chennai hospital cover

சென்னையில் கோவாக்ஸின் தடுப்பூசிகள் தட்டுப்பாடு|அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 கொரோனா நோய் தடுப்பை கட்டுப்படுத்த, இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷில்டு என இரு தடுப்பூசிகள் உள்ளன. இவைகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளிலும் ரூ.250க்கு தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம்.

இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி 24 மணிநேர அவசர மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு இரு தடுப்பூசிகளும் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது  கோவாக்ஸின் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai-hospital

 

மேலும், ஏற்கனவே முதல் டோசேஜ்  கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கதி என்ன? இப்படியாக பிற மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் என்னவாகும் என்பது தெரியவில்லை. டெல்லி போன்று, சென்னையிலும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் நிலைமைகள் மோசமாகிவிடும்.

கோவாக்ஸின் தடுப்பூசி தயாரிக்க நிதி ஒதுக்கவில்லையா? அப்படி ஒதுக்கி இருந்தால் ஏன் தட்டுப்பாடுகள் வருகின்றன?

chennai-hospital-2

 

தற்போது, ரெம்டெசிவிர் மருந்துக்கும் கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு விட்டன. இந்த மருந்து கிடைக்காமல் வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் சென்னைக்கு வந்து வாங்கிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கோவிஷில்டு தடுப்பூசிகள், இன்னும் எத்தனை கையிருப்புகள் உள்ளன என்பதும் தெரியவில்லை. ஏற்கனவே சென்னை மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பிரச்சனைகளை அரசு சரிசெய்யவில்லை என்றால் டெல்லி போன்று இங்கும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

chennai-hospital-3

 

மேலும் படிக்க: 

 தமிழக மக்களுக்கு மழிச்சியான செய்தியை வெளியிட்டார் சுகாதார செயலாளர்:

இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர் விளக்கம்:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top