முதியோருக்கென பிரத்யேகமாக தரமான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் விதமாக,தி.நகரில்,“ஜெரிகேர்” என்கின்ற மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த நேரங்களில்,முதியோருக்கான மருத்துவத்தின் மீதான,கவனிப்பில் குறைப்பாடுகள் இருந்தன.இதனை சரி செய்யவும்,2025ல் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதம் நபர்கள்,60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்பதால்,அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்க,சிறப்பு மருத்துவமனை ஒன்று உருவாக்க,முடிவு செய்யப்பட்டுள்ளது.மூத்த மருத்துவர்,வி.எஸ்.நடராஜன் வழிகாட்டுதலின் படி,டாக்டர்கள் லட்சுமிபதி,ரமேஷ்,மற்றும் சீனிவாஸ் உள்ளிட்டோர் முதியோருக்கான “ஜெரிகேர்” மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர்.
தி.நகரில் உள்ள நாயர் சாலையில்,50 படுக்கை வசதிகளுடன்,இம்மருத்துவமனை இயங்கி வருகிறது.இங்கு,வயதானவர்களின் உடல்நலபிரச்னைகளை நிர்வகிக்க,நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் உள்ளனர்.இந்த மருத்துவமனையில்,சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளிகள் சிகிச்சை பெற,மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் குறைக்கப்படுவதுடன்,அவர்களின் வாழ்கை தரம் மேம்படுத்தப்படுகிறது.மேலும்,முதியவர்களுக்கான 24 மணி நேர சிகிச்சையும்,அவர்களுக்கான அவசரகால ஆம்புலன்ஸ் சேவை,நோயாளிகளை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்ள,திறமை வாய்ந்த நர்சுகள் உட்பட,பல்வேறு மருத்துவ மேலாண்மையும்,இந்த மருத்துவமனை வாயிலாக,நோயாளிகளுக்கு கிடைக்கின்றன.முதியோருக்கான இத்தகைய வசதியினை கொண்டுவந்ததற்கு,அதுவும் தமிழகத்திற்கு கொண்டுவந்ததற்கு “ஜெரிகேர்” மருத்துவமனை குழுமத்திற்கு பாராட்டுக்கள்.அதே சமயத்தில்,இதே திட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்ப்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!.