Main Menu

What’s New?

Connect With Us

புற்றுநோய் உட்பட பல நோய்களை தீர்க்கும் பூண்டு குழம்பு!/எப்படி செய்வது?

Read Carefully

SHARES

பூண்டு பிடிக்காதவர்களுக்கும் பூண்டு குழம்பு பிடிக்கும். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வதால் புற்றுநோயை தடுக்கிறது.மேலும் நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும் இப்படி பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான மருத்துவ குணங்களை கொண்டுள்ள பூண்டை மூலப் பொருளாக வைத்து, டேஸ்டியான செட்டிநாடு பூண்டு குழம்பு எப்படி செய்வதென்று இங்கே குறிப்பிடுகிறோம்.

தேவையானப் பொருட்கள்:

பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க

கடுகு – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

* தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
* சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

குறிப்பு: பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால் வத்தல் குழம்பு ரெடி!

Top