பிரேம்ஜி திருமணம் பற்றி மனம் திறந்த கங்கை அமரன்.

தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பொக்கிஷம் இளையராஜா. இவரது சகோதரர் கங்கை அமரன். இவர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றொருவர் நடிகர் பிரேம்ஜி.

பிரேம்ஜி அமரன் சில படங்களில் ஹீரோவாகவும், இசையமைத்தும் உள்ளார். அண்ணன் வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் அவர் வந்துவிடுவார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகர்களுக்கு அண்மையில் திருமணம் ஆகியுள்ளது. குறிப்பாக, நடிகை காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, பரினிதி சோப்ரா, யாமி கவுதம் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்டது. சில நடிகை நடிகைகள் நீண்ட காலமாக திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளனர். உதாரணமாக, அனுஷ்கா, த்ரிஷா போன்றோர்.

பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி வெகுநாட்களாக உள்ளது. அவருக்கு தற்போது வயது 42. சமீபத்தில் இவரது தாயார் காலமானார். ஆகையால், அதில் பிரேம்ஜி மிகவும் உடைந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்ஜியின் திருமணம் குறித்து கங்கை அமரனிடம் கேட்டபோது அவர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தற்போது கங்கையமரன் பேசியதாவது : தனது மனைவியின் இறப்பிற்கு பிறகு Premji மிகவும் கஷ்டப்படுகிறார் எனவும் தனது மனைவியின் கடைசி ஆசையை தன் மகன் Premji திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனவும் கூறியுள்ளார்.

எனவே பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க:

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top