இந்தியர்களின் அடிப்படை சட்டங்கள் : Fundamental Rights of Indians |Part -2.

இந்தியர்களின் அடிப்படை சட்டங்கள். இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள்.

இந்தியர்களாகிய நாம் நாட்டில் பல உரிமைகளையும், சட்டங்களையும் பின்பற்றவேண்டியுள்ளது.   இந்தியாவில், அடிப்படை உரிமைகளை அளிக்கும் பல சட்டங்கள் உள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக மக்கள் சிலர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. அடிப்படை உரிமைகளை அளிக்கும் சில சட்டங்களை பற்றி காணலாம்.

18 சட்டங்களும் உரிமைகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவற்றில் பகுதி 2-ல் சிலவற்றை நாம் காண்போம்.

1. போலீஸ் சட்டம், 1861 :  

ஒரு போலீஸ் அதிகாரி சீருடை அணிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் கடமையில் இருப்பார். ஒரு நபர் அந்த அதிகாரியிடம் புகார் அளித்தால், அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முடியாது என்று சொல்ல முடியாது.

 

2. மகப்பேறு நன்மைச் சட்டம், 1961 : 

கர்ப்பிணிப் பெண்ணை எந்த நிறுவனமும் வேலையை விட்டு நீக்க முடியாது . இது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் 10 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்தால், கர்ப்பிணிப் பெண் ஊழியர் 84 நாட்கள் ஊதியதோடு கூடிய மகப்பேறு விடுப்பு பெற முடியும்.

 

3. வருமான வரி சட்டம், 1961 :   

வரி மீறல் வழக்கில், வரி வசூல் அதிகாரிக்கு உங்களை கைது செய்ய அதிகாரம் உண்டு, ஆனால் உங்களை கைது செய்வதற்கு முன்பு, அவர்கள்  உங்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும். நீங்கள் எவ்வளவு காலம் காவலில் இருப்பீர்கள் என்பதை வரி ஆணையர் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

4.   இந்து மதம் திருமண சட்டம் பிரிவு -13 :  

இந்து மதம் திருமண சட்டம், 1955 ன் படி ஒரு கணவனோ அல்லது மனைவியோ தங்களது திருமண வாழ்வை தாண்டிய ஒரு தொடர்புக்காக விவாகரத்து செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறுதல், இந்து மாதத்தில் இருந்து மாறுவது இந்த சட்டப்படி குற்றமாகும்.

 

5. குற்றவியல் நடைமுறை விதிமுறை, 1973 :  

பெண்கள் போலீஸ் கான்ஸ்டபிள் மட்டுமே பெண்களை கைது செய்ய முடியும் . ஆண் கான்ஸ்டபிளுக்கு பெண்களை கைது செய்ய உரிமை இல்லை. மாலை 6 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்னதாக காவல் நிலையங்களுக்குச் செல்வதை மறுக்க பெண்களுக்கு உரிமை உண்டு. ஒரு கடுமையான குற்றம் நடந்தால் மாஜிஸ்திரேட்டிலிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு கிடைத்த பின்னரே  , ஒரு ஆண் போலீஸ்காரர் ஒரு பெண்ணை கைது செய்ய முடியும்.

6. சிட்டிசன் சாசனத்தின்படி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வலைத்தளம்):

உணவு சமைக்கும் போது அவர்களின் எரிவாயு சிலிண்டர் வெடித்தால், எரிவாயு நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டும். இந்த இழப்பீட்டைக் கோருவதற்கு நுகர்வோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

 

Also Read: CITIZENS AWAKE
 
Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top