Main Menu

What’s New?

Connect With Us

BIGBOSS 4 -ல் முதன்முறையாக வழங்கப்பட்ட ‘EVICTION FREE PASS’.

biggboss 4
Read Carefully

SHARES

BIGBOSS 4  நிகழ்ச்சியில் முதன்முறையாக ‘EVICTION FREE PASS’ வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் நான்காவது சீசன் கடந்த 4.10.2020 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  இதில், நடிகை ரேகா, நடிகை சனம் ஷெட்டி, செய்திவாசிப்பாளர் அனித்தா சம்பத், மாடல் சம்யுக்தா, விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, நடிகை ஷிவானி, நடிகை கேப்பிரில்லா, நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொண்டுள்ளனர். 

மேலும், நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், பாலாஜி முருகதாஸ்,    பாடகர் ஆஜித், மற்றும் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

bigboss 4

 

முதல் வார முடிவில் கமல்ஹாசன் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.  போட்டியாளர்கள் அனவைரும் தங்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் கூறினர். கமல் அவர்களும் அவைகளை தீர்த்து வைத்தார். குறிப்பாக, அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இடையேயான சண்டையை பேசி தீர்த்து வைத்தார். 

இடையிடையில் பிக் பாஸ் தந்த டாஸ்க்குகளும் நடைபெற்றன. இந்த வாரம் தொடக்கம் முதலே என்ன டாஸ்க் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  நேற்று, முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில்  ‘EVICTION FREE PASS’ வழங்கப்பட்டது. அந்த பாஸ் ஒருவருக்கு மட்டுமே தரப்படும் எனவும், அது யாருக்கு என நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டும் என பிக் பாஸ் கூறினார்.  

EVICTION FREE PASS :

இதனை தொடர்ந்து எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சுரேஷ் சக்ரவர்த்தி,  அனித்தா சம்பத், ஆஜித், ரேகா, சனம் ஷெட்டி, கேப்பிரில்லா, ஷிவானி மற்றும் சம்யுக்தா கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து அந்த பாஸ் வாங்குவதற்கான காரணத்தை கூறவேண்டும். அந்த கருத்து பெரும்பான்மையான நபர்கள் ஒத்துக்கொண்டால் அந்த நபர் உள்ளே இருக்கலாம். இல்லையேல், அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு அந்த ‘பாஸ்’ வழங்கப்படமாட்டாது. 

இப்படியாக ஒவ்வொருவராக வெளியேறி, அனித்தா, சுரேஷ், ஆஜித் மூவரும் உள்ளே இருந்தனர். இந்த டாஸ்க்கின் தொடக்கம் முதலே சுரேஷ் சக்ரவர்த்தி GAMMING STRATEGY – யுடன் விளையாடினார். அதாவது எல்லோரையும் தானாக முன்வந்து வெளியே அனுப்பிவிட்டு தான் கடைசி வரைக்கும் இருந்தார். இதனை தாமதமாக உணர்ந்த ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் சேர்ந்து சுரேஷ் – ஐ  NOMINATE செய்து வெளியே அனுப்பிவிட்டனர்.

biggboss 4tamil

 

பிறகு, ரம்யா மற்றும் ஆஜித் இருவரும் பேசி கடைசியில் ஆஜித்திற்கு அந்த EVICTION FREE PASS -யை வழங்கினார் ரம்யா பாண்டியன். வெளியில் வந்ததும் அனைத்து போட்டியாளர்களும் அஜித்திற்கு பாஸ் கிடைத்ததற்கு அவனை தூக்கி கொண்டாடினர். பின்னர் பிக் பாஸ் EVICTION FREE PASS -யை பயன்படுத்தும்  முறை மற்றும் கடைபிடிக்க வேண்டிய முறைகளை கூறினார்.

அந்த பாஸ் வைத்திருக்கும் நபர் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வேறு யாரேனும் கைகளில் அந்த பாஸ் சென்றால் அந்த பாஸ் -யை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த பாஸ் ஆனது இந்த சீசன் முழுவதும் செல்லும் எனவும், அதனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார் பிக் பாஸ். இனிவரும் நாட்களில் ஆஜித் அந்த பாஸ் -யை எப்படி பாதுகாக்க போகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 
Top