தேர்தல்  ஹீரோஹிஸம் |மக்களை முட்டாள்ளாக்குகிறார்கள்:

vijay-with-ajith-2021-vote-cover

தேர்தல்  ஹீரோஹிஸம் |மக்களை முட்டாள்ளாக்குகிறார்கள்:

rajini-vote-2021

தமிழகத்தில் தேர்தல் வந்தாலே, தேர்தல் ஆரம்பம் முதல் முடியும் வரை சினிமா பிரபலங்கள் மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.

சினிமா பிரபலங்கள், எந்த கட்சியில் இணைகிறார்கள், எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள், போன்றவற்றை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.

அந்த வகையில், ஓட்டு போடும் தினத்தன்று சினிமா பிரபலங்கள், ஓட்டு போடுவதை மக்களும், ஊடகங்களும் கவனிக்கும்.

jayalalitha-with-karunanithi

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருக்கும் போது, திரை நட்சத்திரங்களை மிக பெரியதாக பேச்சுக்கள் அடிப்படவில்லை. இவர்கள் இருவரும் மறைந்த பின்னர், திரை பிரபலங்களின் மீது கவனம் போனது. அதற்கு முன்னர் வரை ரஜினிகாந்த் பெயர் மட்டுமே அடிப்படும்.

கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த பின்னர் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வர அறிவித்தார்கள். இதில், கமல் தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவித்தார். ரஜினியோ…இதோ…அதோ…என இழுத்து, உடல் நிலை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.

makkal-needhi-maiam-kamal-hassan-party-name

ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை மக்கள் தேர்தலின் போது உன்னிப்பாக கவனிப்பதுண்டு.

இதில், அஜித் ஒவ்வொரு தேர்தலின் போதும் வரிசையில் நின்று பொறுமை காத்து வாக்களிப்பார். ஆனால், இம்முறை அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வாக்களிக்க வந்தனர். கூட்ட நெருசலில் சிக்கிக்கொண்டனர். இதற்கு முழு பொறுப்பும் காவல் துறையை சார்ந்தது. பிரபலங்கள் கூட்டத்தில், சிக்கிக்கொள்ளும் அளவிற்கு காவலர்களின் அலட்சியம் இருக்கிறது.

Celebrities_at_TN_Assembly_Elections_2021.jpg

ஆனால், செல்ஃபி எடுக்க முயலும் ரசிகர்களிடம் அஜித் கோவப்பட்டிருக்க வேண்டாம். இது அவரின் இமேஜை பாதிக்கும். இருந்த போதிலும், மாஸ்க் அணிய சொல்லியும், மன்னிப்பும் கேட்டார் அஜித். அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

அஜித் அணிந்திருந்த, மாஸ்க்கின் நிறம், சமூக வலைதலங்களில் கடும் விவாத பொருளாக மாறியது. அவர் அணிந்து வந்த மாஸ்க்கில், மாஸ்க் கருப்பு நிறத்திலும், அதன் வாருகள் சிவப்பு நிறத்துலையும் இருந்துள்ளது. இவை திமுகவின் சின்னமாக இருப்பதால், அஜித் திமுகாவிற்கு மறைமுக ஆதரவினை தெரிவிப்பதாக ரசிகர்கள் மத்தியில் உலா வந்தன. இதற்கு அஜித் தரப்பு எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

vijai-vote-2021

விஜய், ஒரு படி மேலே சென்று, வீட்டில் இருந்தே சைக்கிள் ஓட்டி வாக்குச்சாவடிக்குள் வந்தார். ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். வாக்களித்த பின்னர், அடிச்சிக்கோ…பிடிச்சுக்கோ…. என ஒரு ரசிகரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அவரை ரசிகர்கள் விரட்டியபடி செல்ஃபி எடுக்க முற்பட்டனர். சில ரசிகர்கள், விஜய்யின் கையை பிடித்தும், சட்டையை இழுத்தும், விஜய்யை படாத பாடு படுத்தினர். விஜய் சைக்கிள் ஓட்டியது, பெட்ரோல் விலை ஏற்றத்தை  நாசுக்காக தன் கண்டனத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு, இதற்கு எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.

இந்த விஷயத்தில் சென்னையில்.காம் சில கேள்விகளை முன்வைக்கிறது:

2021-tamil-cinema-vote

1.) நீங்கள் (திரை பிரபலங்கள்) மக்களுக்கு பிடித்தவர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களை போல இருக்க முடியாது. நீங்கள்  பொது இடங்களில் மற்ற மனிதர்களை போல் இருக்க நினைப்பது பாராட்டக்கூறியது, ஆனால், உங்களுக்கும் மன கசப்பு, மக்களுக்கும் மன கசப்பாக அமைந்து விடும். ஆகையால், உங்களுக்கு கொடுக்கும் சிறப்பு வசதியினை பயன்ப்படுத்திக்கொள்ளுங்கள். பொது வழியில் நாம் வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று திரை பிரபலங்களுக்கு தெரியாத?

vijay-2021-election-pic

2.) கோவில் போன்ற வேறெதெனும் இடங்களில், வரிசையில் நிற்கிறீர்களா? தேர்தலின் போது மட்டும் ஏன் வரிசையில்  நிற்கிறீர்கள்? ஏன் இந்த நாடகம்?

ajith-2021-election-pics

3.) உங்களுக்கு இருக்கும் வசதிகளை தாராளமாக பயன் ப்படுத்திக்கொள்ளுங்கள். நானும் சாதாரண மனிதன் தான் என்று காட்டிக்கொள்ள, மக்களை தொந்தரவு செய்யாதீர்கள். ரஜினி போல் மாறு வேடத்தில் வெளியே வாருங்கள். ஏன் இந்த ஹீரோஹிஸம்?

2021-cinema-vote

4.) தமிழ் நாட்டில், ஏராளமான பொது பிரச்சனைகள் மற்றும் சமூக பிரச்சனைகள் உள்ளன. அதனை ஒன்றை கையில் எடுத்து நீதித்துறையை நாடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம். அதை விட்டு சைக்கிளில் செல்வதால் என்ன பயன்?

எப்போது இவர்கள்(திரை பிரபலங்கள்) மாறுவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நடிகரை நடிகராக பாருங்கள், அவர்களை பின்தொடராதீர்கள். அது மாற நம் கையில் உள்ளது.

 

மேலும் படிக்க:

 1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்:

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top