மீண்டும் மூடப்பட்ட திரையரங்குகள் : தள்ளிப்போகும் புதுப்படங்களின் ரிலீஸ்.

Theatre Closed due to covid 2nd wave in india Movies releasing in OTT platform

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 படங்கள் வரை வெளியாகும். இது மட்டுமில்லாமல் பிறமொழி படங்களும் வெளியாகும். ஆனால், கடந்த ஓராண்டாக திரையரங்கில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை சொற்ப எண்களிலேயே உள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் திரைத்துறையும் ஒன்று. சென்ற வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடிக்கிடந்தன. சில திரையரங்குகளை உரிமையாளர்கள் விற்கவும் செய்தனர். திரையரங்கில் வெளியாகவிருந்த படங்கள் OTT தளத்தில் வெளியிட தயாராகின. அந்தவகையில்,2020-ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், சூர்யா நடித்த சூரரை போற்று போன்ற படங்கள் OTT -யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

எட்டு மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட திரையரங்கில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் சிறப்பாக வெளியான படம் தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்”. இப்படம் ஒரு வருடத்திற்கு பிறகு மக்கள் கூட்டத்தை திரையரங்கு நோக்கி இழுத்து வந்த படம் என்றே சொல்லலாம். வசூலிலும், விமர்சன ரீதியாகவும் இப்படம் BLOCK BUSTER படமாக அமைந்தது. அதன்பிறகு, திரையரங்குகளின் இயல்புநிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கின.

netflix-amazon-india-streaming_15478

ஆனால், அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. கொரோனா நோய் பரவலின் 2-ஆம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள், மால்கள், பெரிய கடைகள் போன்றவற்றை மூட உத்தரவிட்டது. இதனால், திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுவிட்டன. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த “கர்ணன்” படம் நிறுத்தப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Taanakkaran

ரிலீசுக்கு தயாராகும் படங்கள் :

மேலும், இந்தவாரம் வெளியாகவிருந்த படங்கள் அனைத்தும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சசிகுமார், சமுத்திரக்கனி, மிருணாளினி நடித்த “எம்.ஜி.ஆர்.மகன்” படம் வெளியாகவில்லை. இதுஒரு புறமிருக்க பல திரைப்படங்கள் OTT தளங்கள் நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம், துக்ளக் தர்பார் படம்  சிவகார்திகேயனின் “டாக்டர்”, சிம்புவின் “மாநாடு”, ஆர்யாவின் “சர்பட்டா”, அதர்வாவின் “குருதி ஆட்டம்”, ஐஸ்வர்யா ராஜேஷின் “தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்” போன்ற படங்கள் OTT தளங்களில் வெளியாவதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இம்மாதம் இறுதியில் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவலால் அதன் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

OTT தளங்களை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கும் படங்களால் திரையங்கு உரிமையாளர்களின் வாழ்வு கேவிக்குறியாகியிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களின் முதலீட்டை மட்டுமே பார்த்துவிட்டு நஷ்டம் அடையாமலிருக்க இந்த முடிவை எடுக்கின்றனர். ஆனால், திரைப்படங்களின் வெளியீட்டை மட்டுமே நம்பியிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

 

மேலும் படிக்க:

மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி : “சர்தார்” படத்தில் வித்தியாசமான தோற்றம்.

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top