Main Menu

What’s New?

Connect With Us

இவர் யார்னு தெரியுமா?|பி.யூ.சின்னப்பா|எம்.ஜி.ஆரின் முன்னோடி|

Read Carefully

SHARES

PUChinnappa

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நடிகர் பி.யூ.சின்னப்பா.1916ல் மே:5ம் தேதி உலகநாதன் பிள்ளை
மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனாக புதுக்கோட்டையில் பிறந்தார்.இவருக்கு நடிகர் மன்னன் என்கின்ற பெயரும் உண்டு. சகுந்தலா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சின்னப்பா,தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினார்.சின்னப்பாவின் தகப்பனார், அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும்,நடிக்கவும் கற்றுக் கொண்டார்.தன் தந்தை மேடை நாடகங்களில் பாடும்போது தானும் சேர்ந்து பாடுவாராம்.இதனை கேட்ட பலரும் சின்னப்பாவை அழைத்து,கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாட வைப்பார்கள்.

இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல்.பள்ளிக்கூடத்தை விட்டு விலகி சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார்.டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் “தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா” என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.“மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில்,தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார்.அவரின் சிபாரிசில் பாய்ஸ் கம்பனி முதலாளி பழனியப்பா பிள்ளை சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் தனது நாடகக் கம்பனியில் சேர்த்துக் கொண்டார்.

அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார்,சின்னப்பா.அதன் பின்னர் மிக விரைவிலேயே “ராஜபார்ட்” போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி.வெங்கடேசன், எம்.ஜி.இராமச்சந்திரன், எம்.கே.ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.தனது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார்.பிறகு எஸ்.ஆர்.ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.நாடக உலகின் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

1936ஆம் ஆண்டு வெளிவந்த “சவுக்கடி சந்திரகாந்தா” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா.அதனைத் தொடர்ந்து,“பஞ்சாப் கேசரி”,”அனாதைப் பெண்”,”யயாதி” போன்ற படங்களில் நடித்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், சின்னப்பாவை 1940ஆம் ஆண்டில் தனது “உத்தம புத்திரன்” படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் சின்னப்பாதான். படம் பெரும் வெற்றி பெற்றது.

Uthama_puthiran_1940.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1942ஆம் ஆண்டு வெளிவந்தப்படம்“மனோன்மணி” இப்படம் வசூலில் பெரும் சாதனைப்படைத்தது. டி.ஆர்.ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார்.1944 ஆம் ஆண்டில் “பிருத்விராஜ்” படத்தில் தன்னுடன் நடித்த சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.“ஜகதலப்பிரதாபன்” என்கின்ற படத்தில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார்,சின்னப்பா. “மங்கையர்க்கரசி” என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய“காதல் கனிரசமே”…. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் ரசிக்கப்படுகிறது.

மொத்தம் 25 படங்களை நடித்துள்ள சின்னப்பா.1951ல் மிக குறைந்த, 35 வயதில் இறந்துவிட்டார்.கடைசியாக “சுதர்சன்” என்கின்ற திரைப்படம், இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.1930களில் சூப்பர் ஸ்டாராக விலங்கியவர்.எம்.ஜி.ஆரின் முன்னோடி.இத்தகைய பெருமைக்கூரியவரை, Chennaiyil.com நினைவு கூறுகிறது.

Top