இது வெறும் ட்ரைலர்தான்…சேகர்பாபு | கோவில் நில ஆக்கிரமிப்பில் திமுக தில்லு முல்லு.

இது வெறும் ட்ரைலர்தான்...சேகர்பாபு | கோவில் நில ஆக்கிரமிப்பில் திமுக தில்லு முல்லு.

சென்னை வடபழனி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டதாக திமுக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பழைய சர்வே எண் 21, 23, 25 மற்றும் 26 ஆகிய பட்டா நிலங்களை மீட்டதாக அறிவித்தார்.

அதன் பரப்பளவு 5.38 ஏக்கர் ஆகும். இந்த நிலம் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது. இந்தநிலத்தை ஆக்கிரமிப்புவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால் அந்த நிலத்தில் வாடகை செலுத்தாமல் வாகனங்களை பார்க்கிங் செய்திருந்தவர்களை இனி இங்கு நிறுத்தக்கூடாது என வெளியேற்றிருக்கிறது. இதனை தாங்களே சென்று ஆக்கிரமிப்புவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்தது போல் நாடகமாடியுள்ளது திமுக அரசு. அந்த நிலத்தை எவரும் ஆவண மோசடியோ அல்லது ஆவண திருத்தமோ செய்யவில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு இது மீட்டெடுத்த நிலமாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த செயலுக்கு சேகர்பாபு -வை பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு சேகர் பாபுவும் “இது வெறும் ட்ரைலர்தான் மெயின் பிக்சர் இனி தொடரும் என்று தெரிவித்துள்ளார்”. காலி இடத்தில வானங்களை நிறுத்தியவர்களிடம் இனி இங்கு நிறுத்தக்கூடாது என தெரிவித்து எச்சரிக்கை பலகையை வைத்தால் அது நிலத்தை மீட்டதாகி விடுமா என்ன?

புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல நல்ல திட்டங்களை அறிவிதுள்ளார். உதாரணமாக, மகளிருக்கு நகர பேருந்தில் இலவசம், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4,000 போன்ற அறிவிப்புகள். ஆனால், இதுபோல சில தேவையில்லாத செயல்களுக்கு வெட்டி வீராப்பு செயல்களுக்கு ஊடகங்கள் உண்மை தன்மையை அறிந்து செய்தி வெளியிட வேண்டும்.

இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.250 கோடியாம். மேலும், வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலரின் கணவரை வைத்து மீட்டுள்ளது அறநிலையத்துறை.

 

மேலும் படிக்க: 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top