Main Menu

What’s New?

Connect With Us

DISNEY + HOTSTAR -ல் வெளியாகும் “மூக்குத்தி அம்மன்” : 4 WEB SERIES -ம் வெளியாகிறது. .

Read Carefully

SHARES

DISNEY + HOTSTAR -ல் இணையவழி கருத்தரங்கு [ONLINE CONFERENCE] நேற்று  நடைபெற்றது.  HOTSTAR செயலியில் அடுத்தடுத்து  தொடர்கள், நிகழ்ச்சிகள் , படங்கள் வெளியாக இருக்கின்றன.  அந்தந்த, படக்குழு பங்குபெற்ற கருத்தரங்கு இணையவழியில் நடைபெற்றது.  KOFFEE WITH KOLLYWOOD  என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி  “தமிழ் நாட்டின் புதிய திரை, உங்க சொந்த திரை” என்ற TAGLINE -னுடன்  ஆரம்பமானது.

அந்நிகழ்ச்சியில், இயக்குனர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நடிகை காஜல் அகர்வால், ஆகியோர் பங்குபெற்றன. மேலும், RJ பாலாஜி, நடிகர் ஜெய், நடிகர் சத்யராஜ், நடிகைகள் தம்மன்னா, சீத்தா, வாணி போஜன், பண்டுபெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், HOTSTAR நான்கு இணைய தொடர்கள் [WEB SERIES] மற்றும் ஒரு படத்தை வெளியிடுவாதாக அறிவித்தனர். HOTSTAR சார்பாக                     திரு. சுனில் ராயன் அவர்கள் பங்குபெற்றார். இவர் DISNEY + HOTSTAR -ன் ப்ரெசிடெண்ட் ஆவார். 

தியேட்டர்கள் ஏழு மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதால் OTT தளங்களில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு கூடியுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு HOTSTAR இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

அடுத்த மாதம் தீபாவளி நெருங்குகிறது. திரையரங்குகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதால் படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால், OTT தளங்களில் வெளியாகும் படங்களுக்காக ரசிகர்கள் கத்துகொண்டிருக்கின்றனர். 

HOTSTAR -ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை DD தொகுத்து வழங்க, மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். ஒவ்வொருவராக தங்களது படங்களை பற்றி அறிமுகம் செய்துகொண்டு போஸ்டர், ட்ரைலர்களை வெளியிட்டனர்.

வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல்…

மூக்குத்தி அம்மன் :

ஆர்.ஜே.பாலாஜி., இயக்கி நடித்திருக்கும் படம் “மூக்குத்தி அம்மன்”.  நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தை, ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே இப்படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தபோதிலும் மீதமுள்ள படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தி உள்ளனர். 

இப்போது இப்படம் தீபாவளியன்று HOTSTAR -ல் வெளியாகிறது. RJ பாலாஜி தற்போது STAR SPORTS -ல் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். தற்போது 20 நாட்களுக்கு அதிலிருந்து விடுப்பு எடுத்து கொண்டு “மூக்குத்தி அம்மன்” படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் இறங்கியுள்ளார். நாளை மறுநாள் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட உள்ளார் பாலாஜி. படத்தின் FIRST LOOK வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றன. இப்படம், FANTASY, காமெடி படமாக உருவாகியுள்ளது. தீபாவளியன்று இப்படம் HOTSTAR -ல் வெளியாக உள்ளது.  

MY PERFECT HUSBAND : 

சத்யராஜ், சீத்தா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், பிக் பாஸ் ஆஜித் உள்ளிட்டோர் இந்த தொடரில்  நடித்துள்ளனர். DRAMA, காமெடி கலந்த தொடராக இது இருக்கும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார். இத்தொடர் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்புகள் மேற்கொண்டு  வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

LIVE TELECAST :

இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முதலாக இயக்கி இருக்கும் இணைய தொடர் LIVE TELECAST. காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ்,டேனியல் பாலாஜி, பிரியங்கா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடரின் போஸ்டர் வெளியிட பட்டது.  இதன் வெளியீட்டு தேதியும்,  அறிவிக்கப்படவில்லை.  இத்தொடர் HORROR ஜானரில் உருவாகியுள்ளது.

TRIPLES :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் இத்தொடரில் நடிகர் ஜெய், வாணி போஜன் இணைந்து நடித்துள்ளனர். காதல், காமெடி, ரொமான்ஸ் கலந்த தொடராக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு வருவதற்கு முன்பாக குறும்படங்கள் போன்றவைகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NOVEMBER STORY  :

தம்மன்னா நடித்திருக்கும் இத்தொடர், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.    தம்மன்னா, இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவைகளில், மூக்குத்தி அம்மன் படம் மட்டுமே தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தொடர்களின் வெளியீட்டு தேதி அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Top