இத்தேர்தலில் “வேல்” ஆதிக்கம்|தி.மு.கவை வசை பாடும் மக்கள்!
வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் “முருகனின் வேல்” மிக பெரிய பங்கு வகிக்கிறது என்பது இது வரை தமிழக தேர்தலில் நடந்திராத வரலாறு என்று கூறினால் மிகையாகாது.
“கருப்பர் கூட்டம்” என்னும் யூ டியூப் சேனல் “கந்த சஷ்டி” பாடலின் வரிகளை வைத்துக்கொண்டு அர்த்தம் கூறுகிறேன் என்ற பெயரில் மிக ஆபாசமான முறையில் சுரேந்தர் என்பவர் பேசி அதனை வெளியிட்டிருந்தார்.இதற்கு மக்கள் இடையே கடும் எதிர்ப்புகள் வந்தன.இதனால் “கருப்பர் கூட்டம்” யூ டியூப் சேனல் முடக்கப்பட்டு,சுரேந்தரை கைது சிறையில் அடைத்தது.
இதற்கு பா.ஜா.க; இந்து முன்னணி; போன்ற கட்சிகளும் அ.தி.மு,கவும் கடும் கண்டனங்களை தெரிவித்தது.வழக்கம் போல் தி.மு.க; அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ்; விடுதலை சிறுத்தைகள் கட்சி; கம்யூனிஸ்ட் கட்சிகள்; என இடது சாரி காட்சிகள் வாய் திறக்காது மூடிக்கொண்டது.முருகன் என் முப்பாட்டன் என்று கூறும் சீமான் கூட யூ டியூப் சேனலை எதிர்க்கவில்லை.
தி.க; போன்ற கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கொண்ட இயக்கங்கள் கூட பெரியதாக “கருப்பர் கூட்டம்” யூ டியூப் சேனலுக்கு ஆதரவுகளை தெரிவிக்கவில்லை.
ஆனால்,நடிகர்கள் பிரசன்னா, நட்ராஜ், சரத்குமார்; போன்றோர் “கருப்பர் கூட்டம்” யூ டியூப் சேனலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜா.க தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தினார்.கொரோனா தடையை மீறி முருகன் “வேல் யாத்திரை” நடத்துகிறார்,என்கின்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு ஆளும் கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவிக்க,பா.ஜா.காவுக்கும் அதிமுகவுக்கும் முட்டல்கள் தொடங்கின.இருப்பிலும் வேல் யாத்திரையை தொடங்கி நிறைவு செய்தார்,தமிழக பா.ஜா.க தலைவர் முருகன்.
இதன் தொடர்ச்சியாக, கடவுள் முருகனின் மீதும், அவரின் வேலின் மீதும் பக்தியும், மரியாதையும், கொண்ட எண்ணம் மேலும் உருவானது. 2021 ஆண்டு முருகபெருமானின் உருவம் பதித்த காலண்டர் பிரபலமானது.அனைத்து வீட்டிலும் இக்காலண்டர் பார்க்கப்படலாம்.
இதனால் சற்று பயந்து போன திமுக; நானும் ரௌடிதான் என்பதுபோல் நானும் ஹிந்துதான் என்பதுபோலும், நான் முருகனுக்கு எதிரானவன் அல்ல என்பது போல் நிகழ்ச்சி ஒன்றில் தொண்டர்கள் மு.க.ஸ்டாலின்னுக்கு “வேல்” வழங்கினர். இதனை பெற்றுக்கொண்டு போட்டோக்கு போசும் கொடுத்தார்.
“அன்று ரெங்கநாதர் கோவில் வாசலில் பட்டர்கள், மு.க.ஸ்டாலின் நெற்றியில் குங்குமம் இட்டனர்.இதனை அழித்தார் ஸ்டாலின்….
அதே போல் தேவர் ஜெயந்தியில் விபூதி கொடுக்கப்பட்டது, அதனை கீழே போட்டுவிட்டார்….இது கூட பரவாயில்லை….
“கருப்பர் கூட்டம்” என்னும் யூ டியூப் சேனல் முருகனை பற்றி தவறாக பேசும் போது வாயை மூடிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின், இன்று ஏன் கையில் வேலை ஏந்தி பிடிக்கவேண்டும்? ஓட்டுக்கா? என மக்கள் சரமாரியாக சமூக வலைதலங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
இதற்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், ” வேல் என்பது கடவுளின் கைப்பொருள் மட்டுமல்ல இரும்பு காலத்தில் மனிதன் கண்டறிந்த வேட்டைக்கருவிகளுள் ஒன்று வேல். தமிழரின் ஆதி ஆயுதம் வேல். அது வேட்டைக்கு உரியது. போருக்கும் உரியது மற்றும் யாருக்கும் உரியது” என்று கூறினார்.
சரி…..வைரமுத்து வழிக்கே செல்வோம்….எல்லாருக்கும் உரியதாக விலங்கும் “வேல் ஆயுதத்தை “கருப்பர் கூட்டம்” யூ டியூப் சேனல் விமர்சனம் செய்யும் பொது ஏன் வைரமுத்து, ” இது அனைவருக்கும் உரியது இது கடவுளின் பொருள் மட்டும் அல்ல” ஆகையால் வேல் ஆயுதத்தை பற்றி பேசக்கூடாது என்று அன்று சொல்லிருக்கலாமே? வேலானது அனைவருக்கும் சொந்தம். அந்த வேல் ஆயுதத்தை கடவுளின் ஆய்தமாக பேசும் போது மு.க.ஸ்டலின், வைரமுத்து போன்றோர் அமைதியாக இருப்பர்.ஆனால் ஸ்டலின் கையில் ஏந்தி நிற்பது தமிழரின் ஆதி ஆயுதம் வேல்….புரிகிறதா இவர்களின் அரசியல்….என்று மக்கள் கடுமையாக சமூக வலைதலங்களில் விளாசி வருகின்றன.
இவைகள் எல்லாம் பார்க்கும் போது அரசியல் நமக்கும் புரிகிறது!…..!
மேலும் படிக்க: 1.) வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?|வியாபார வளர்ச்சி ஆலோசகர்:
2.) தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது|தயாரித்த நிறுவனங்கள் எச்சரிக்கை: