Main Menu

What’s New?

Connect With Us

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம் : யாஷ், ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல்.

director shankar next movie
Read Carefully
SHARES

 

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம். யாஷ், ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல். தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் கொண்டுசென்றவர்களுள் இயக்குனர் ஷங்கர் ஒருவர். அவரின் படங்களான எந்திரன், 2.0 படங்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு நடிகர் நடிகைகள் முன்டியடித்துக்கொண்டு இருக்கின்றனர். தற்போது, உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

director shankar

 
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற விபத்தால் இரண்டு உதவி இயக்குனர்கள் மரணித்தனர். இதனால், படப்பிடிப்பு தடைபட்டது. பிறகு கொரோனா பரவலால் படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பிறகு, அரசியல் பிரவேசம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்றவைகளில் கலந்துகொண்டார் கமல். இதனால், “இந்தியன் 2” படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 
இது ஒரு புறம் இருக்க ஷங்கரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம், வரலாற்று ரீதியிலான படம் என்றும் போர் சம்மந்தப்பட்ட கதையம்சம் உடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாவதாகவும் கூறப்படுகிறது. பிரமாண்ட பொருட்ச்செலவில் நான்கு வருடம் படப்பிடிப்பு நடைபெறும் நேற்று கூறப்படுகிறது. Historical War Drama கலந்த இப்படத்தின் கதையை ஊரடங்கு காலத்தில் எழுதி முடித்தாராம்.
 
kgf yash RamCharan RRR

 

 
 
 
 
 
 
 
 
 
 
தற்போது, இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மற்றும் கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் யாஷ் இப்படத்தில் நடிப்பதாக கூறப்டுகிறது. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் 2 மற்றும்  ராம் சரண் நடிப்பில் RRR படமும் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 
இதன்மூலம் ஷங்கரின் அடுத்த பிரமாண்ட படம் உருவாகவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.  
 
 
    

SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top