மன்னிப்பு கேட்ட செல்வராகவன் : பெரியாரை பற்றி சர்ச்சையான பதில் | “நெஞ்சம் மறப்பதில்லை” ராமசாமி.

selvaraghavan apologize nenjam marappathillai
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம். சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, கடந்த மார்ச் 5 ஆம் தேதி படம் வெளியாகியது. படம் வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பொதுவாக, செல்வராகவனின் படங்கள் வெளியாகும்போது இல்லாத வரவேற்பு சில ஆண்டுகள் கழித்து கிடைக்கப்பெரும். அந்தவகையில், நெஞ்சம் மறப்பதில்லை படமும்  வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செல்வராகவனின் முந்தைய படங்களான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களை ரசிகர்கள் தற்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடிவருகின்றனர்.
selvaraghavan interview
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா போன்றோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில், நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். படத்தில், எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரத்தின் பெயர் ராமசாமி ஆகும்.
selvaraghavan
இ.வே. ராமசாமி என்கின்ற பெரியாரை குறிப்பிடும் வகையில் அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதிலளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த பதிலுக்கு பல தரப்புகளில் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Selvaraghavan At The 'NGK' Audio & Trailer Launch

இந்நிலையில், செல்வரகவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நண்பர்களே அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும் என்று பதிவிட்டிருந்தார். அதாவது, அந்த நிகழ்ச்சியில் கூறிய பதிலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் படிக்க: 

 

டேய்! சும்மா இர்ரா…எஸ்.ஜே.சூர்யா |  செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek.  

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top