SHARES
சியான் விக்ரம் – துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் “சியான் 60”. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கயிருக்கிறது. விக்ரமின் 60 -ஆவது படத்தை தன் மகன் DHRUV VIKRAM -முடன் இனைந்து நாடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது. கேங்ஸ்டர், டிராமா கலந்த படமாக இது இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதற்காக, தனது உடலை உடற்பயிற்சி செய்து மெருகேற்றி வருகிறார் DHRUV VIKRAM. அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகியது.
தற்போது, இப்படத்தில் நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாணிபோஜன் இதில் யாருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், வாணிபோஜன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான “ஜகமே தந்திரம்” படம் வெளியாக தயாராக இருப்பது குறிப்படத்தக்கது. மேலும், விக்ரம் தற்போது “கோப்ரா” , “பொன்னியின் செல்வன்” படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை முடித்துவிட்டு இப்படத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
சிவகார்த்திகேயன், யோகிபாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது : தமிழக அரசு அறிவிப்பு.
SHARES