மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி 2013 -ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். 5 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. பிறகு, அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி திரிஷ்யம் 2 என்ற பெயரில் OTT தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி படத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது, திரிஷ்யம் படத்தின் 3 ஆம் பாகம் எடுக்கும் திட்டம் இயக்குனருக்கு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும், மோகன்லாலும் இதை பற்றி பேசியுள்ளனர் என்று கூறினார்.
தற்போது, OTT -யில் வெளியான திரிஷ்யம் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதன் 3 -ம் பாகம் தயாராவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தில் மோகன்லால் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் ரீமேக் செய்து, நடித்து “பாபநாசம்” என்ற பெயரில் வெளியிட்டார். அதில் அவருக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். தமிழிலும், இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து “பாபநாசம் 2” எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கில், இதன் மறு உருவாக்கத்தில், வெங்கடேஷ் மற்றும் மீனா நடிப்பில் உருவாகி வெளியானது. தற்போது, அதன் 2 ம் பாகத்தின் படப்பிடிப்புக்கு பூஜை போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: